‛டமால் டுமில்’.. சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை.. அடுத்த 48 மணிநேரம் எப்படி இருக்கும்? விபரம்
சென்னை: சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தின் பல இடங்களில் இடி மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரி, அலுவலகத்தில் இருந்து வாகனங்களில் வீடு திரும்புபவர்கள் சிரமப்பட்டு வரும் நிலையில் அடுத்த 48 மணிநேரத்தில் சென்னை வானிலை நிலவரம் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை என்பது எதிர்பார்த்த அளவுக்கு பெய்யவில்லை. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் உள்பட தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் பகலில் வெயில் வாட்டி வதைத்தது. கோடை காலத்தை போல் வெயில் அடித்ததால் மக்கள் சிரமப்பட்டனர்.

இருப்பினும் சென்னை மற்றும் அதனை சுற்றிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பகலில் வெயில் இருந்தாலும் மாலையில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
இந்நிலையில் தான் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமி்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி கோவை, திருப்பூர், தனி, திண்டுக்கல், மதுரை, சிவங்கை, வேலூர், திருப்பத்தூர் தர்மபுரி, சேலம் மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் இல்லை. இருப்பினும் கூட இன்று பகல் நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. காற்றும் நன்றாக வீசியது. இத்தகைய சூழலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் பல இடங்களில் இன்று மாலை இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது.
சென்னையை பொறுத்தமட்டில் பெரம்பூர், கொளத்தூர், மாதவரம், திருவிக நகர், அண்ணாநகர், வில்லிவாக்கம் ம்றறும் அதனை சுற்றிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சில இடங்களில் இடி மின்னலுடன் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பல சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. இதனால் பள்ளி, கல்லூரி, அலுவலகம் முடித்து வீடு திரும்புவோர் சிரமப்பட்டு வருகின்றனர். அதேபோல் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, செங்குன்றம், புழல் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் இன்று மாலையில் இருந்து நல்ல மழை பெய்து வருகிறது.
இதுதவிர மாலை 5 மணி நிலவரப்படி சென்னை மற்றும் அதனையொட்டி பிற மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணிநேரத்துக்குள் எழும்பூர், மாம்பலம், புரசைவாக்கம், தண்டயைார்பேட்டை, மதுராந்தகம், உத்திரமேரூர், அயனாவரம், பெரம்பூர் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் மிதமானது முதல் கனமை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதியை பொறுத்தமட்டில் அடுத்த 48 மணிநேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடுன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரத்தில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை என்பது 36.17 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை என்பது 26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications