இன்னிங்ஸ் 2 ஆரம்பம்.. பெஞ்சல் போன 3வது நாளில்.. மீண்டும் ஆரம்பித்த மழை.. இன்று எங்கெல்லாம் பெய்யும்?
சென்னை: சென்னை, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நள்ளிரவு பரவலாக மழை பெய்துள்ளது. பெஞ்சல் புயலுக்கு பின் 3 நாட்களாக மழை பெய்யாமல் இருந்த நிலையில் மீண்டும் மழை பெய்துள்ளது.
தமிழ்நாட்டில் நாகை, தஞ்சை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் , கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. காலை 10.30 மணி வரை நல்ல கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்பின் மழை கொஞ்சம் குறையும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
5.12.2024; கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இராமநாதபுரம், புதுக்கோட்டை தம்மார், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு வட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
6.12.2024: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் சில இடங்களில் கனமழைக்கு பெய்யவாய்ப்புள்ளது.
7.12.2024 மற்றும் 8,12. 2004 தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
9.12.2024 மற்றும் 10.12.2024 தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பாதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
11.12.2024: 12.12.2024 தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தாகப்பட்டினம். மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள். பதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், காலப்புரம். செங்கல்பட்டு, திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி பெரம்பலூர். அரியலூர். திருச்ரொப்பள் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அதி கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் பறநகர் பகுதிகளைத்தான வானிலை முன்னறிவிப்பு;
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில்
பொதுவாக மிதமான மழை பெய்யக்கூடும், அவ்வப்போது வடகடலோர இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 26-27 செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியசாகவும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஊசில பாதிகளில் மிதமான பெய்யக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
15.11.2023 மத்தியமேற்கு-வடமேற்கு வங்கக்கடல் பாதிகள் வடஆந்திர-ஒரிசா கடலோர பகுதிகளில் கூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
16.11.2003: மத்தியமேற்கு மற்றும் அதை சுட்டிய வடமேற்க வங்கக்கடல் பகுதிகளில் சுறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 40 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வடஆந்திர ஒரிசா கடலோர பகுதிகளில் சுறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் .












Click it and Unblock the Notifications