அடுத்த 2 மணி நேரம்.. 25 மாவட்டங்களில் பிச்சு உதறும் மழை! வெயிலுக்கு நடுவே வானிலை மையம் ஜில் அப்டேட்
சென்னை: தமிழ்நாட்டில் கோடை வெயிலுக்கு நடுவே கடந்த சில நாட்களாகவே மாநிலத்தில் ஓரிரு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இது கோடை வெப்பத்தைக் குறைப்பதாகவே இருக்கிறது. இதற்கிடையே அடுத்த 2 மணி நேரத்திற்குத் தமிழ்நாட்டில் 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் இறுதியிலேயே வெப்பம் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. மார்ச் மாதத்தில் பல இடங்களில் வெப்பம் அசால்டாக 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டிவிட்டது. அதீத வெப்பம் காரணமாகப் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வந்தனர். இந்தச் சூழலில் தான் கடந்த சில நாட்களாக மாநிலத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

2 மணி நேரம்
ஏப்ரல் மாதம் எதிர்பாராத விதமாகப் பெய்யும் இந்த மழையால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். சென்னை உட்படப் பல பகுதிகளில் பெய்த இந்தக் கோடை மழையால் வெப்பம் ஓரளவுக்குக் குறைந்துள்ளது. இதற்கிடையே இன்றைய தினம் அடுத்த 2 மணி நேரத்திற்குத் தமிழ்நாட்டில் 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எங்கெல்லாம் மழை
அதாவது கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், மயிலாடுதுறை, ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. அதேபோல திருவண்ணாமலை, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனால் காரணமாகச் சில பகுதிகளில் தண்ணீர் தேங்கலாம் என்றும் சாலைகளிலும் நீர் தேங்க வாய்ப்பு இருப்பதால் டிராபிக் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. எனவே, இன்று வெள்ளிக்கிழமை என்பதால் வெளியே செல்லத் திட்டமிடுவோர் இதையும் கருத்தில் கொண்டே பிளான் செய்யுங்கள்.
வானிலை மையம்
முன்னதாக வானிலை மையம் வெளியிட்டிருந்த தினசரி செய்திக்குறிப்பில், "தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. எனவே இன்றும் நாளையும், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏப்ரல் 20 முதல் ஏப்ரல் 24 வரையிலான நாட்களில் தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தினசரி செய்திக்குறிப்பு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று (18-04-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை (19-04-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
வெயில் கொடுமை! உடல் சூட்டை தணிக்கும் 5 அற்புத உணவுகள்! இளநீர் குடிக்கும் போது அந்த தவறை செய்யாதீங்க! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications