தமிழகத்தில் பொளக்க போகுது கனமழை! அடுத்த 3 மணி நேரத்திற்கு 25 மாவட்டங்களில் மழை இருக்கு! அலர்ட்
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் மொத்தம் 25 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. பருவமழை இத்தனை காலம் பெரியளவில் இல்லாமல் இருந்த நிலையில், இப்போது மாநிலத்தில் பல இடங்களிலும் மழை கொட்டி வருகிறது.

இதனால் தமிழ்நாட்டில் உள்ள மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதேபோல மாநிலத்தில் இருக்கும் முக்கிய நீர்நிலைகளும் நிரம்ப ஆரம்பித்துள்ளது. வரும் நாட்களிலும் மழை தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த 3 மணி நேரம்: இதற்கிடையே அடுத்த மூன்று மணி நேரத்திற்குத் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும் மழை பெய்யும் என்று வானிலை மையம் அலர்ட் கொடுத்துள்ளது. அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தமிழ்நாட்டில் 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருப்பூர், கோவை, நீலகிரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
அதேபோல திருவண்ணாமலை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கூடிய மழை இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது மாநிலத்தில் மொத்தம் 25 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், தலைநகர் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலும் ஓரிரு மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம்: முன்னதாக வானிலை மையம் இன்று வெளியிட்ட தினசரி செய்திக்குறிப்பிலும் இன்று பல இடங்களில் கனமழை இருக்கும் என்றே கூறப்பட்டிருந்தது. அதில், கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 10.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
நாளைய தினம் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.. அதேபோல நவ. 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் நவ. 14ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தலைநகர் சென்னை: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் சிவலோகம் (சிற்றாறு-II) (கன்னியாகுமரி) 90 மிமீ மழை பெய்துள்ளது. மேலும், , திருப்பூர் PWD, குழித்துறை (கன்னியாகுமரி), மண்டலம் 7 அம்பத்தூர் (சென்னை) தலா 80 மிமீ மழை பெய்துள்ளது. தமிழ்நாடு முழுக்க பல்வேறு இடங்களிலும் கடந்த 24 மணி நேரத்தில் மழை பெய்துள்ளதாகவே வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதேநேரம் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications