காற்றழுத்த தாழ்வு மண்டலம் எங்கே இருக்கிறது? கனமழைக்கு காரணம் என்ன? விளக்கிய வானிலை மையம்
சென்னை: வங்கக் கடலில் நிலைக் கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் எங்கே இருக்கிறது என்பது குறித்து தென்மண்டல வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை மத்திய மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.

இது தற்போது விசாகப்பட்டினத்திற்கு தென்கிழக்கே சுமார் 510 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும். முதலில் இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து பின்னர் வடக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து 17ஆம் தேதி வடமேற்கு வங்கக் கடலில் ஒடிஸா கடற்கரை பகுதியில் நிலவக் கூடும்.
மேலும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவி வந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தொடர்ந்து நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக சென்னை டிஜிபி அலுவலகத்தில் 19 செ.மீ மழை பதிவாகியுள்ளது. 36 இடங்களில் கனமழை பதிவாகியுள்ளது.
வானிலை முன்னறிவிப்பை பொருத்தமட்டில் அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் அநேக இடங்களில் உள்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
கனமழையை பொருத்தமட்டில் அடுத்து வரும் 24 மணி நேரத்தில் டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடிய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகரை பொருத்தமட்டில் பொதுவாக மிதமான மழை பெய்யக் கூடும். ஒருசில பகுதிகளில் சற்று பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொருத்தமட்டில் இன்றும் நாளையும் குமரிக் கடல், மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் தமிழக கடற்கரை பகுதிகளில் பலத்த காற்றானது மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசும். 15, 16, 17 ஆகிய தேதிகளில் மத்திய மேற்கு , வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்றானது மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வீசக்கூடும். எனவே மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வடகிழக்கு பருவமழையை பொருத்தவரை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் கடந்த அக்டோபர் 1 முதல் இன்று வரையிலான காலகட்டத்தில் பதிவான மழையின் அளவு 24 செ.மீ., இந்த காலகட்டத்தின் சராசரி அளவு 27 செ.மீ. இது 13 சதவீதம் இயல்பை விட குறைவு. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.
இது எம்ஜேஓவால் மழை பெய்கிறது என சொல்ல முடியாது. ஏற்கெனவே வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இருக்கிறது. எனவே இந்த மழை தற்போது உருவாகியுள்ள சிஸ்டத்தினால் வரக் கூடியது. தமிழகத்தில் இன்று ஒரு நாள் மட்டும் கனமழை பெய்யும். ஆனால் மிதமான மழை இருக்கும். இவ்வாறு பாலசந்திரன் தெரிவித்தார்.
-
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
28 நாட்கள் கழித்துதான் கேஸ் சிலிண்டர் வருமா? இதென்ன கணக்கு! இட்லி, தோசைக்கு தமிழகத்தில் டிமாண்டு? -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
இது கோடைக்காலம் இல்லை.. கோடை மழைக்காலம்! ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
“நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது.. அது இல்லாமலோயே கல்வி சிறப்பாக உள்ளது” - தமிழக அரசு -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு












Click it and Unblock the Notifications