சென்னை உட்பட 10 மாவட்டங்களில்.. அடி வெளுக்கப்போகும் மழை! அடுத்த 3 மணி நேரம் உஷார்
சென்னை: சென்னை உட்பட 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், மழை எச்சரிக்கை கவனம் பெற்றிருக்கிறது.
"சென்னை, செங்கல்பட்டு, கடலூர், காஞ்சிபுரம், நாமக்கல், திருவள்ளூர், தூத்துக்குடி, திருவண்ணாமலை, விழுப்புரம், விருதுநகர் மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

முன்னதாக இன்று மதியம் வெளியாகியிருந்த வானிலை அறிவிப்பில், "கடந்த 24 மணி நேரத்தில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை அநேக இடங்களில் 2-5° செல்சியஸ் வரை குறைந்துள்ளது. ஏனைய தமிழகத்தில் பொதுவாக பெரிய மாற்றம் ஏதுமில்லை. தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் 2-3° செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகத்தில் பொதுவாக இயல்பை ஒட்டியும் இருந்தது.
அதிகபட்ச வெப்பநிலை : மதுரை விமான நிலையம்: 35.0° செல்சியஸ்
குறைந்தபட்ச வெப்பநிலை (சமவெளிப்பகுதிகளில்):- கரூர் பரமத்தி: 18.5° செல்சியஸ்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், கடந்த அக்.1ம் தேதி தொடங்கி நேற்று வரை பெய்த வடகிழக்கு பருவமழையின் சராசரி அளவு 246.1 மி.மீ. இந்த காலத்தின் இயல்பு மழையின் அளவு 227.7 மி.மீ. அப்படியெனில் மழை இயல்பை விட 8% கூடுதலாக பெய்திருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்) 10 செ.மீ, வெம்பாக்கம் (திருவண்ணாமலை) 8 செ.மீ, ஆவடி (திருவள்ளூர்), கலவை AWS (ராணிப்பேட்டை), மண்டலம் 01 விம்கோ நகர் (சென்னை), மண்டலம் 01 எண்ணூர் (சென்னை), செங்குன்றம் (திருவள்ளூர்) தலா 7 செ.மீ, மண்டலம் 02 மணலி (W 17) (சென்னை), வாலாஜா (ராணிப்பேட்டை) தலா 6 செ.மீ என மழை பதிவாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications