Chennai Rain: சென்னை டூ டெல்டா வரை! இந்த இடங்களில் எல்லாம் 2 நாட்களுக்கு நல்ல மழை! வெதர்மேன் அப்டேட்
சென்னை: சென்னை முதல் டெல்டா வரை கடலோர மாவட்டங்களில் இன்று முதல் 26ஆம் தேதி வரை நல்ல மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணித்துள்ளார். 26 ஆம் தேதிக்கு பிறகு நீண்ட நாட்களுக்கு மழை பிரேக் எடுக்க போகிறது என்றும் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: சென்னையில் நல்லதொரு பருவமழை தொடங்கியுள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு இந்த மழை நீடிக்கும். அதன் பிறகு மழையிலிருந்து நீண்ட ஓய்வு கிடைக்கும். சென்னையில் மழை இன்று இரவு முதல் நாளை காலை வரை பெய்யும்.

இன்றைய தினம் சென்னையிலிருந்து டெல்டா மாவட்டங்கள் வரை மிதமான மழையும், 25 ஆம் தேதி சென்னை- டெல்டா வரை பரவலான மழையும், 26ஆம் தேதி உள் மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் மழை பெய்யும்.
கடலோர மாவட்டங்கள்
இந்த மழை கடலோர மாவட்டங்களில் மட்டும், உள் மாவட்டங்கள், தென் மாவட்டங்களிலும் பெய்யும். டெல்டா மாவட்டங்களான நாகை, தஞ்சை, திருவாரூர், காரைக்கால், பெரம்பலூர், அரியலூர், கடலூர், பாண்டிச்சேரி, விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், வேலூர், ராணிப்பேட்டை, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் , செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் நல்ல மழையை கொடுக்கும்.
5 ஆண்டுகள்
கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் ஜனவரி மாதம் பெய்த மழையின் அளவை பார்ப்போம்!
2026- 25.8 மி.மீ. (அதிகம் ஜன 23 வரை)
2025- 24.3 மி.மீ. (அதிகம்)
2024- 50.5 மி.மீ. (மிக அதிகம்)
2023- 5.1 மி.மீ. (குறைவு)
2022- 34.8 மி.மீ. (அதிகம்)
2021- 139.3 மி.மீ. (மிக மிக அதிகம்)
தமிழகத்தில் ஜனவரி மாதத்தில் மழையின் இயல்பான அளவு 12.3 மி.மீ.தான். குடியரசு தினத்தன்றும் மழை பெய்யும் என தெரிவித்துள்ளார்.
மோதும் காற்று
அது போல் காஷ்மீரில் இருந்து வரும் மேற்கத்திய காற்றும் கிழக்கில் இருந்து வீசும் காற்றும் மோதிக் கொள்வதால் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகி அதனால் மழை பெய்து வருகிறது. இந்த மழை 26 ஆம் தேதி வரை இருக்கும் என்றும் இன்னொரு பதிவில் தெரிவித்துள்ளார்.
7 மாவட்டங்கள்
தமிழகத்தில் இன்று முதல் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில் சென்னையில் நேற்று மாலை முதல் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால் மார்கழி மாதம் முடிந்தாலும் குளிர் போகாத நிலை உள்ளது.
வளி மண்டல மேலடுக்கு சுழற்சி
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், "கிழக்கு திசை வளிமண்டல அலை நிலவும் அதே வேளையில், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஜனவரி 23ம் தேதி முதல் ஜனவரி 29ம் தேதி வரை தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இலேசான முதல் மிதமான மழையை எதிர்பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலோர மாவட்டங்களில் மழை
அந்த வகையில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் வட மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,செங்கல்பட்டு, கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
வறண்ட வானிலை
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவி வந்தது. இதனால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் அதிக குளிர் மற்றும் அதிக வெப்பம் நிலவியதால் பொதுமக்கள் அவதியடைந்தனர். இந்த நிலையில் நேற்று பகலில் சென்னையின் பல்வேறு இடங்களிலும் விட்டு விட்டு மழை பெய்ய தொடங்கியது.
சாரல் மழை
மாலை சாரல் மழையில் இருந்து இரவு லேசான மழையாக மாறியது. பகலில் இருந்தே மிகவும் குளிரான சூழல், சாலையில் பனிமூட்டம் இருந்தது. இரவில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், நாகப்பட்டினம், கடலூர் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்திலும் மழை விட்டு விட்டு பெய்தது.
சென்னை மழை
சென்னையை மட்டும் பொறுத்தவரை இன்று வானம் பெரும்பாலும் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஓரிரு இடங்களில் மிதமான முதல் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications