Michaung update ஃபர்ஸ்ட் ஆப் வடதமிழகத்திற்கு! செகண்ட் ஆஃப் ஆந்திராவுக்கு.. ஹாட்ஸ்பாட் இதுதான்!
சென்னை: மிக்ஜாம் புயலால் இன்று வடதமிழகத்திற்கு அதிக மழை பெய்யும் என்றும் வீட்டை விட்டு யாரும் வெளியே வராதீர்கள் என்றும் சென்னை ரெயின்ஸ் ட்விட்டர் பக்கம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் நிலவி வரும் மிக்ஜாம் புயல் புதுச்சேரிக்கு கிழக்கு- வடகிழக்கே சுமார் 210 கிலோமீட்டர் தொலைவிலும் சென்னைக்கு கிழக்கு- தென்கிழக்கே சுமார் 125 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று பிற்பகல் மத்தியமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் வரக் கூடும். தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக கடலோரப் பகுதிகளில் நிலவக்கூடும். தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நகரும்.
05-12- 2023 அதாவது நாளை முற்பகல் தெற்கு ஆந்திரா கடற்கரை நெல்லூருக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே தீவிர புயலாக கடக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலானது சென்னைக்கு அருகே 100 கி.மீ. தூரமாக இருக்கும் போது மிக கனமழையை கொடுக்கும் என சொல்லப்பட்டுள்ளது. மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
புயல் கரையை நெருங்கி வரும் பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சரியாக சென்னையிலிருந்து கிழக்கு வட கிழக்கு பகுதியில் 125 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளதாக சென்னை ரெயின்ஸ் தெரிவித்துள்ளது. அதன்படி தற்போது 125 கி.மீ. தூரத்தில் உள்ள மிக்ஜாம் புயலானது வடதமிழகம், தெற்கு ஆந்திரா பகுதிக்கு மெல்ல நகர்ந்து வருகிறது.
இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் மகாபலிபுரத்திற்கும் காவாலிக்கும் இடையே அதிக மழை பொழிவை கொடுக்கும். இன்றைய தினம் முதல் பாதி வடதமிழகத்தில் கனமழை பெய்யும். அது போல் இரண்டாவது பாதி ஆந்திர கடலோர பகுதியில் மழையை கொடுக்கும். காலை முதலே கனமழை பெய்யும் காற்றும் தொடரும். தேவையின்றி யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிக கனமழை இன்று மாலை வரை பெய்யக் கூடும். காலை 3 மணி முதலே அதிக மழையும் காற்றும் இருந்து வருகிறது. மெரினா, பட்டினம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
இன்னைக்கும் மழை விடாது.. 14 மாவட்டங்களில் வெளுக்க போகுது! சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை மையம் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்.. விடாமல் வெளுக்க போகுது மழை.. வானிலை மையம் எச்சரிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ்












Click it and Unblock the Notifications