இவங்க எல்லாம் சரியில்லை.. மொத்தமாக மாற்றணும்.. ஸ்டாலின் கையில் எடுக்கும் சாட்டை.. அடியோடு மாறுது

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் புயல் வெள்ளம் ஏற்பட்ட நிலையில் விரைவில் சில அதிகாரிகளை மாற்ற முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 1 மாதமாகவே அடிக்கடி கடும் மழை பொழிந்து வருகிறது. இந்த நிலையில், வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல், சென்னையை புரட்டி போட்டு உள்ளது. ஒரு மாத காலமாக விட்டுவிட்டு பெய்த மழை.. அதன்பின் புரட்டி போட்ட 2 நாள் மழையால் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்கள் கடுமையாக பாதித்துள்ளன.

CM Stalin will change IAS and IPS officials soon as Chennai flood and Cyclone hits bad

அதுவும் மாநிலத்தின் தலைநகரான சென்னையின் முக்கிய பகுதிகள் அனைத்திலும் மழை நீர் குளம் போல் தேங்கி போக்குவரத்துக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் கடும் சவாலை ஏற்படுத்தியது. சென்னை சாலைகளை சரி செய்யவும், மழை நீர் கால்வாய்கள் மற்றும் கழிவு நீரகற்றும் கால்வாய்களை சரி செய்யும் பணிகளுக்காக மட்டும் 4,000 கோடி அளவில் திட்டங்கள் தீட்டப்பட்டன.. ஆனாலும், அந்த திட்டத்தின் பலன் மக்களுக்கு கிடைக்கவில்லை.

இப்படிப்பட்ட நிலையில்தான் சென்னையை மிக்ஜாம் புயல் தாக்கி கனமழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டு உள்ளது.

கவனத்துக்கு போன விஷயம்: இந்த புயல் மற்றும் வெள்ளத்தை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினுக்கு மூத்த அமைச்சர்கள் மூலமாக சில தகவல்கள் சென்று இருக்கின்றன. அதன்படி முக்கியமாக மக்கள் கோபமாக இருக்கிறார்கள். வெள்ளம் காரணமாக கடுமையாக அப்செட் ஆகி உள்ளனர். இது நமக்கு எதிராக திரும்பும். இவ்வளவு நாள் நாம் மக்களுக்கு செய்த நல்ல விஷயங்கள் எல்லாம் வீணாகிவிடும். அதனால் எதாவது செய்தே ஆக வேண்டும் என்று முதல்வரிடம் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் சொல்லி இருக்கின்றனர். இதனையடுத்து சென்னை அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் மீது கோபம் கொண்டிருக்கிறார் முதல்வர்.

முக்கியமாக அதிகாரிகள் சிலர் மீது புகார்கள் வைக்கப்பட்டு உள்ளன. அரசு இயந்திரம் வேகமாக செயல்படுகிறது, அமைச்சர்கள் களத்தில் உள்ளனர். ஆனால் சிலர் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் செயல்படவில்லை. முக்கியமாக அரசுக்கு எதிராகவே இவர்கள் சில வேலைகளை செய்கிறார்கள்.

சமீபத்தில் ஆவின் தொடங்கி பல பொய்யான செய்திகளை பாஜக பரப்பியது. இதற்கு பின் சில ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உடைந்தையாக இருந்துள்ளனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வெள்ளத்தின் போது சில ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அரசுக்கு எதிராகவே செயல்பட்டு உள்ளனர். வெள்ள நிவாரணத்தில் மோசடி கூட செய்துள்ளனர்.

இவர்கள் மீதெல்லாம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் வழியாக ரிப்போர்ட் சென்றுள்ளதாம். இதை ஸ்டாலின் ஆய்வு செய்தும் வருகிறாராம் ,

நடவடிக்கை: இதையடுத்தே சென்னையில் புயல் வெள்ளம் ஏற்பட்ட நிலையில் விரைவில் சில அதிகாரிகளை மாற்ற முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி விரைவில் போலீஸ் உயர் அதிகாரிகள், சில ஐஏஎஸ் அதிகாரிகள், சில துறையை சேர்ந்த செயலாளர்கள் மாற்றப்பட வாய்ப்புகள் உள்ளதாம்.

இதற்கான அறிவிப்பு விரைவில் வரும் என்கிறார்கள். இதில் சில சர்ப்ரைஸ் மாற்றங்கள் இருக்கும் என்றும் கூட தமிழ்நாடு அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+