ஆந்திராவை சூறையாடிய மிக்ஜாம் புயல்.. தலா. ரூ.2500 நிவாரணம் அறிவித்த முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி
திருப்பதி: ஆந்திர மாநிலத்தில் மிக்ஜாம் புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.2500 நிவாரண நிதியாக அறிவித்துள்ளார் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி.
வங்க கடலில் மையம் கொண்டு இருந்த மிக்ஜாம் புயல் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் வரலாறு காணாத பெருமழையை கொட்டித்தீர்த்தது. ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கி திங்கட்கிழமை இரவு வரை பெய்த பேய்மழையால் 4 மாவட்டங்களும் வெள்ளக்காடாக மாறியுள்ளன.

பல ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தங்கியுள்ளனர். பலரோ வெள்ளம் தேங்கிய வீடுகளை விட்டு விட்டு சொந்த ஊருக்கு சென்று விட்டனர். வீடுகளில் இருந்த பொருட்கள் அனைத்தும் வெள்ளநீரில் மூழ்கி வீணாகி விட்டது. அடுத்தது என்ன செய்வது என்று மக்கள் செய்வது அறியாமல் தவித்து வருகின்றனர்.
மிக்ஜாம் புயல், ஆந்திராவின் நெல்லூர்- மசூலிப்பட்டிணம் இடையே பாபட்லாவில் டிசம்பர் 5ஆம் தேதி செவ்வாய்கிழமை பிற்பகல் தொடங்கி மாலை வரை 100 கி.மீ வேகத்தில் பயங்கரமான சூறவாவளி பேய் காற்றுடன் கரையை கடந்தது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் மழை ஓய்ந்து, ஆந்திராவில் கன மழை பெய்ய துவங்கியது
ஆந்திராவில் மிக்ஜாம் புயல் கரையைக் கடந்ததால், அங்கு மணிக்கு 100 முதல் 130 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. இதனால், ஆந்திராவின் வட கடலோர மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம், கிட்டேடுவில் அதிகபட்சமாக 39 செ.மீ, நெல்லூர் மாவட்டம், மனுபோலுவில் 36.8 செ.மீ. மழையும் பதிவானது.
ஆந்திராவின் பல ஆறுகள் பெருக்கெடுத்து ஓடியது. வெள்ளநீர் வெளியேறி குடியிருப்பு பகுதிகளிலும், வயில்களிலும் சூழந்துள்ளது. புயல் கரையை கடந்த போது வீசிய சூறாவளி காற்றால் பல இடங்களிலும் மின் கம்பங்கள், மரங்கள் உள்ளிட்டவை சாய்ந்து பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
போர்க்கால அடிப்படையில் புயல் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணி நடைபெறவேண்டும். மேலும், உடனுக்குடன் மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டார். 48 மணி நேரத்திற்குள் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கிட வேண்டும் எனவும் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்திருந்தார்.
புயலால் பாதிக்கப்பட்டவர்கள் நூற்றுக்கணக்கான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அனகாபல்லி பகுதியில் மட்டும் 52 முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு, இதுவரை 60 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஆந்திராவில் இதுவரை 194 கிராமங்களில் இருந்து 40 லட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 25 கிராமங்களும், 2 நகரங்களும் வெள்ளத்தால் சூழப்பட்டு மிகுந்த பாதிப்புக்குள்ளாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆந்திர மாநில அரசு உடனடியாக 23 கோடியை மீட்புப் பணிக்காக ஒதுக்கியுள்ளது என ஆந்திர அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள 10 மாவட்ட மக்களுக்கு குடும்பத்திற்கு தலா ரூ.2500 நிவாரண உதவியாக வழங்க முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். இது இடைக்கால நிவாரணத்தொகை தான் என்றும் பாதிப்புகள் கணக்கெடுக்கப்பட்டு அதற்கேற்ப நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெள்ளம் தேங்கிய பகுதிகளில் இன்னமும் இயல்பு நிலை திரும்பவில்லை. பலரது வீடுகளுக்குள்ளும் வெள்ளநீர் புகுந்து பொருட்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு எப்போது நிவாரணம் அறிவிக்கும் என்பது பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications