கோவையில் மழை வெள்ளத்தில் சிக்கி தத்தளித்த பேருந்து.. வெதர்மேன் சொன்ன விஷயத்தை கவனிச்சீங்களா?
கோவை: "கோவையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சேலத்திலும் மழை பெய்துள்ளது. தென் தமிழக பகுதிகளான நெல்லை, விருதுநகர் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. அதேசமயம் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி சென்னை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள்/ நெல்லூர் கடற்கரைகளை நோக்கி நகர்ந்த பிறகும், வடக்கு உள்பகுதிகள் அசத்துகின்றன." எனத் தெரிவித்துள்ளார் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்.
கோவையில் இன்று மாலை 2 மணி நேரத்துக்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்கிய நிலையில், குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. மேலும், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர். தனியார் பேருந்து ஒன்று வெள்ள நீரில் தத்தளித்தது.

இன்று முதல் தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வடகிழக்குப் பருவமழையின் தீவிரம் காரணமாக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று காலை முதலே தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் மழை பெய்து வந்தது. கோவை, திண்டுக்கல், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உக்கடம், காந்திபுரம், பீளமேடு, சிங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வந்தது. கோவை காந்திபுரம், ராமநாதபுரம், சிங்காநல்லூர், விமான நிலையம், விளாங்குறிச்சி, சரவணம்பட்டி, கணபதி, குனியமுத்தூர், கவுண்டம்பாளையம் உள்ளிட்ட மாநகர பகுதிகளில் இன்று மாலை இடியுடன் தொடர் மழை பெய்தது. அதேபோல கோவை புறநகர் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
இதனால் சாலைகளில் ஆங்காங்கே மழை நீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இதன் காரணமாக சாலைகளில் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். மின்னல் மற்றும் இடியுடன் மழை பெய்ததால் நகரின் சில பகுதிகளில் மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டது.
இதனிடையே, கோவை சிவானந்தா காலனி சாலை சாயிபாபா கோவில் பகுதியில் தனியார் பேருந்து, இரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கியிருந்த மழை நீரில் சிக்கிக்கொண்டது. அதில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் என்று அழைக்கப்படும் பிரதீப் ஜான், கோவையில் பெய்த கனமழை குறித்து பதிவிட்டுள்ளார். கனமழையால் மழைநீர் தேங்கிய நிலையில், அதில் தனியார் பேருந்து சிக்கிக்கொண்ட வீடியோவை பகிர்ந்துள்ளார் பிரதீப் ஜான்.
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள பதிவில், "கோவையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நகர் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. சேலத்திலும் மழை பெய்துள்ளது. திருச்சியில் விரைவில் மழை பெய்யும். தென் தமிழக பகுதிகளான நெல்லை, விருதுநகர் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
ஒரு நல்ல செய்தி என்னவென்றால், குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி சென்னை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள்/ நெல்லூர் கடற்கரைகளை நோக்கி நகர்ந்த பிறகும், வடக்கு உள்பகுதிகள் பரவாயில்லை." எனத் தெரிவித்துள்ளார்.
-
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications