தலைக்கு மேலே ‘சிகப்பு தக்காளி’.. கோவை, நீலகிரிக்கு ரெட் அலர்ட்..வெளுத்து வாங்கப் போகும் கனமழை! உஷார்
சென்னை: கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று மிக மிக பலத்த மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 20 செண்டி மீட்டருக்கு மேல் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், தேனி, தென்காசி மாவட்டங்களிலும் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
கடந்த வாரம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள், வட மாவட்டங்கள், கொங்கு பகுதிகளில் நல்ல மழை பெய்தது. தற்போதும் காலையில் லேசாக வெயில் இருந்தாலும் மாலைக்கு மேல் பலத்த காற்றுடன் பொழிவு இருக்கிறது. இதனால் குளிர்ச்சியான காலநிலை நிலவி வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

குறிப்பாக தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக மத்திய மேற்கு மற்றும் அதனையொட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில், கனமழை அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும், தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள காரணத்தாலும், தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் வலுவான காற்றுடன் கூடிய மழை இன்று பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது. சொன்னது போலவே நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. . இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறது. பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் வெளியே வரவே அச்சப்படும் நிலைமை இருக்கிறது.
மேலும் சுற்றுலா பயணிகள் வருகையும் குறைந்துள்ளதால் வியாபாரிகள் கவலையில் உள்ளனர். தற்போதும் அங்கு தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நீலகிரியில் அதிதீவிர கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்த நிலையில் அங்கு தொடர்மழை பெய்து வருகிறது. மேலும் சனிக்கிழமையும் கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், நீலகிரி ஆகிய மாவட்ட மலைப்பகுதிகளில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி இருந்தது.
இந்நிலையில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று மிக மிக பலத்த மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 20 செண்டி மீட்டருக்கு மேல் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், தேனி, தென்காசி மாவட்டங்களிலும் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications