டிட்வா புயல்.. இலங்கையில் பலி எண்ணிக்கை 191ஆக அதிகரிப்பு.. மரத்தில் ஏறி உயிருக்கு போராடியவர் மீட்பு!
கொழும்பு: இலங்கையில் டிட்வா புயலால் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு காரணமாக பலியானோர் எண்ணிக்கை 159ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் காணாமல் போனோர் எண்ணிக்கை 191ஆக அதிகரித்துள்ளது. இந்த புயலால் சுமார் 7.74 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்திருக்கிறது.
வங்ககடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் காரணமாக இலங்கை முழுவதும் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இலங்கை வரலாறு காணாத மழை, மண்சரிவு காரணமாக நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்வதாக அந்நாட்டு அதிபர் அநுர குமார் திசநாயக அறிவித்திருக்கிறார். இதையடுத்து போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.

டிட்வா புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 159ஆக உள்ளது. அதேபோல் காணாமல் போனோரின் எண்ணிக்கை 191ஆகவும் அதிகரித்துள்ளது. இந்த புயலால் 7.74 லட்சம் மக்கள் மிகப்பெரிய பாதிப்புகளை சந்தித்துள்ளனர். அதேபோல் கண்டி மற்றும் பதுளை மாகாணங்களில் மட்டும் 52 பேர் உயிரிழந்தனர்.
சுமார் 21 மாகாணங்கள் பாதிப்பை சந்தித்துள்ள நிலையில், ஏராளமான வீடுகளும் வெள்ளத்தில் மூழ்கி இருக்கின்றன. சில வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன. அதேபோல் மின்சாரம், விமானம், ரயில், பேருந்து போக்குவரத்து முற்றிலும் முடங்கி போய் இருக்கின்றன. செல்ஃபோன் சேவைகளும் பாதிப்பை சந்தித்துள்ளது.
இதனிடையே இலங்கையின் அநுராதபுரம் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் இருந்து தப்பிக்க ஒருவர் மரத்தில் ஏறி நீண்ட நேரம் போராடி இருக்கிறார். அந்த நபரை ஹெலிகாப்டரில் வந்து விமானப் படை வீரர்கள் காப்பாற்றி அழைத்து சென்றனர். இதன் வீடியோ சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. மறுபக்கம் இலங்கையின் தியபெதும பகுதியில் வெள்ளத்தால் வீட்டில் 3 பேர் சிக்கினர்.
ஒரு பெண் மற்றும் இரு சிறுமிகள் சிக்கி இருப்பது தெரிய வர, உடனடியாக அங்கு சென்ற இலங்கை விமானப் படை வீரர்கள் மீட்டுள்ளனர். அதேபோல் மீட்பு பணிகளுக்காக இந்திய பேரிடர் மீட்பு படையும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் இருந்து நிவாரணப் பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications