Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரிச்சி மேயும் மழை.. மக்களுக்கு உதவ உடனே கிளம்புங்க.. தமிழக கட்சி தலைவர்கள் தொண்டர்களுக்கு உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் கனமழை நீடிக்கும் என்ற அறிவிப்பையடுத்து, மழையால் பாதிக்கப்படும் மக்களுக்கு விழிப்புடன் செயல்பட்டு தமிழக அரசு உதவி கொண்டிருக்கிறது.. அதேபோல, தொண்டர்களும் உதவ வேண்டும் என்று காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி, தேமுதிக உள்ளிட்ட கட்சி தலைவர்கள் தங்களது தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசுடன் இணைந்து திமுக நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள் அனைவரும் தயாராக இருக்கவும் என திமுக தலைமையிலிருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.

cyclone in chennai weather dmdk congress rain

திமுக தொண்டர்கள்: பொதுமக்களும், தன்னார்வலர்களும் முன்வைக்கின்ற கோரிக்கைகள், மழை தொடர்பாக தெரிவிக்கின்ற தகவல்களுக்கு முக்கியத்துவம் அளித்து, அதுதொடர்பான மேல் நடவடிக்கைக்குக் திமுக நிர்வாகிகள் வழிவகை செய்ய வேண்டும் என்றும், குறிப்பாக, களத்தில் தன்னார்வலர்களுடன் கைகோர்த்து, பொதுமக்களுக்குத் தேவையான உதவிகளை அரசிடமிருந்து பெற்றுத் தருவதற்கான தலையாயப் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று திமுக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல, அந்தவகையில், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தொண்டர்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தொண்டர்கள் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்..

செல்வப்பெருந்தகை: காங்கிரஸ் தோழர்கள் அனைவரும் அவரவர் பகுதியில் பொதுமக்கள் பாதுகாப்பாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்... உங்கள் மாவட்டங்களில் அரசால் அறிவிக்கப்பட்டுள்ள அவசர உதவி மையத்தின் உதவியை பொதுமக்களுக்கு கிடைத்திட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மாவட்ட, வட்டார, நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளை உள்ளடக்கிய கட்டுப்பாட்டு அறையை உருவாக்கி பொதுமக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என்றும் செல்வப்பெருந்தகை கேட்டுக் கொண்டுள்ளார்.

அதேபோல, சென்னையில் தாழ்வான பகுதிகளில் இருப்பவர்கள் தேமுதிக அலுவலகத்தில் தங்குவதற்கு, கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அழைப்பு விடுத்துள்ளார்.

இயன்றதை செய்வோம்: "தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை சேர்ந்த அனைத்து மாவட்ட கழக செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அவரவர்கள் இருக்கும் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவியை உடனடியாக பூர்த்தி செய்ய வேண்டும். "இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே" என்ற நமது தலைவரின் கொள்கை படி நம்மால் இயன்ற உதவியை மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்து உதவிட வேண்டும்" என்று பிரேமலதா தொண்டர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

முத்தரசன்: இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "இயற்கை பேரிடரில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் பாதுகாக்கவும், பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் உடனடி நிவாரணம் கிடைக்கவும் இந்திய கம்யூனிஸ்ட் அமைப்புகளும், உறுப்பினர்களும் அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ஒவ்வொரு ஆண்டும் பருவமழையின்போது மக்கள் சந்திக்கும் இன்னல்களே அரசு நிர்வாகத்தின் தோல்வியை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும் என்று தொண்டர்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறார்.

சசிகலா: அதேபோல, சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையிலும், "வரும் முன் காப்போம் என்று செயல்பட வேண்டிய அரசு, பருவமழை காலங்களில் தேவையான அனைத்துபாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் விரைந்து எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+