மிக்ஜாம் புயல் ருத்ரதாண்டவம்: அண்ணா திமுக தலைமை அலுவலகத்துக்குள்ளும் கரை புரண்டோடிய பெரு வெள்ளம்!
சென்னை: மிக்ஜாம் புயல் சென்னையில் கொட்டித் தீர்த்த பெருமழைக்கு அண்ணா திமுகவின் தலைமை அலுவலகமும் தப்பவில்லை. அண்ணா திமுக தலைமை அலுவலகத்துக்குள்ளும் வெள்ளம் கரைபுரண்டோடியதாக அக்கட்சியினர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
வங்க கடலில் நிலை கொண்டு சென்னையை உருக்குலைத்துப் போட்டது மிக்ஜாம் புயல். வரலாறு காணாத பெருமழையை 2 நாட்களாக கொட்டிக் கவிழ்த்து விட்டு ஆந்திராவை நோக்கி நடையை கட்டி இருக்கிறது மிக்ஜாம் புயல்.

சென்னை மாநகரில் நேற்று இரவு முதல் விடிய விடிய பெருமழை பேய்மழை கொட்டியது. இன்று காலை முதல் சுமார் 11 மணிநேரம் இடைவிடாமல் கனமழை வெளுத்தது. சென்னையில் 35 மணிநேரத்தில் சராசரியாக 40 செ.மீ.க்கும் மேலாக மழை கொட்டித் தீர்த்திருக்கிறது. இதனால் சென்னை மாநகரும் புறநகரும் வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கின்றன.

சென்னையில் வெள்ளமாய் ஓடும் புயல் மழை நீர், ஏரிகளில் நிரம்பி ஓடும் உபரி நீர், ஏரிகளில் திறந்துவிடப் படும் உபரி நீர் என ஒட்டுமொத்தமாக சென்னையே முடங்கிக் கிடக்கிறது. வங்க கடலில் சீறிக் கொண்டிருந்த மிக்ஜாம் புயலோ, வெள்ள நீரை உள்வாங்காமல் அலைகழித்துக் கொண்டிருந்தது. தற்போது ஒருவழியாக சென்னையை விட்டு 100கிமீக்கும் அப்பால் ஆந்திராவுக்குள் நுழைந்து ஆட்டம் போடுகிறது மிக்ஜாம் புயல்.

இந்த புயலுக்கு பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் ராயப்பேட்டை தலைமை அலுவலகமும் தப்பவில்லை. ராயப்பேட்டை அதிமுக தலை அலுவலக முன்பகுதியில் இடுப்புக்கும் மேல் அளவு வெள்ள நீர் சூழ்ந்து நிற்கிறது. அலுவலகத்தின் உட்பகுதிக்குள்ளும் வெள்ளம் பாய்ந்தோடி இருக்கிறது. இது தொடர்பான படங்களை அதிமுக பிரமுகர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications