வருகிறது மிக்ஜம்.. ரெடியா இருங்க.. களத்தில் குதித்த பொது சுகாதாரத்துறை.. திடீரென வெளியான அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள 'மிச்சாங்' புயல் வரும் 5-ந்தேதி கரையை கடக்க உள்ள நிலையில், பொது சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

தென்கிழக்கு வங்கக் கடலில் நேற்று நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியிருக்கிறது.. இது நாளைய தினம் புயலாக மாறக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.

Cyclone Michaung and Tamil Nadu Public Health Department Instruction ready medical teams

புயல்: மேலும், இந்த புயல் சென்னை மசூலிப்பட்டினத்திற்கு இடையே கரையை கடக்கும் என V;wfdnt தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கரையை கடக்கும் என சொல்லப்பட்டுள்ளது.. அதேபோல, நாளை மறுநாள் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்ட நிலையில், இது வேகம் குறைந்து டிசம்பர் 5ம் தேதி கரையை கடப்பதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

இதையொட்டி, தென் மேற்கு வங்கக் கடலில் புதுவையிலிருந்து சுமார் 630 கி.மீ. கிழக்கு- தென்கிழக்கேயும் சென்னையிலிருந்து 630 கி.மீ. கிழக்கு தென் கிழக்கிலும் நிலவுகிறது.

வானிலை மையம்: இது அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை டிசம்பர் 3ம் தேதி புயலாகவும் வலுப்பெற்று, 4ம் தேதி காலை தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டியுள்ள வடதமிழக - புதுவை கடலோர பகுதிகளில் நிலவுக் கூடும்.

பின்னர், கடலோர பகுதிகளை ஒட்டி வடதிசையில் நகர்ந்து தெற்கு ஆந்திர கடற்கரையை நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கடக்கக் கூடும் என்றும் சென்னை வானிலை மையம் செய்தி வெளியிட்டிருக்கிறது.

புயல் ஒருபக்கம், பருவமழை இன்னொரு பக்கம் என தமிழகமே குளிர்ந்து கொண்டிருக்கிறது. நம்முடைய தமிழக அரசும், இது தொடர்பான முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண பணிகளில் தீவிரமாக இறங்கி உள்ளது. அந்தவகையில், பொது சுகாதாரத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் உள்ளதாவது:

- தேவையான மருத்துவ பணியாளர்கள் 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டும்.

- அவரச கால மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

- நிவாரண மையங்களில் மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

- தேவையான அளவு கிருமி நாசினி மருந்துகள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

- நிவாரண முகாம்களில் உள்ளவர்களுக்கு சுத்தமான குடிநீர், சுகாதாரமான உணவு வழங்கு

- குடிநீர், சுகாதாரமான உணவு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

- ஆரம்ப சுகாதார நிலையங்களில் அவரச கால மருந்துகளைத் தேவையான அளவு இருப்பு வைத்திருக்க வேண்டும்.

- சுகாதார மையங்களில் 24 மணி நேரம் மின்சாரம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

- போதிய எரிபொருள் உடன் ஜெனரேட்டர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+