ருத்ரதாண்டவமாடிய மிக்ஜாம்: சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு இன்று பொது விடுமுறை!
சென்னை: மிக்ஜாம் புயல் மழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இன்று தமிழ்நாடு அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் நிலை கொண்ட மிக்ஜாம் புயல் சென்னைக்கு மிக அருகே 30 மணி நேரம் நீடித்து நின்றது. இதனால் சென்னை மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் வரலாறு காணாத அளவுக்கு பெருமழை கொட்டித் தீர்த்தது. சென்னை, புறநகரில் 35 மணி நேரத்தில் 43 செ.மீ மழை பெய்து பேயாட்டம் போட்டது.

இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு திங்கள்கிழமை தமிழ்நாடு அரசு பொது விடுமுறை அறிவித்தது. அனைத்து தனியார் அலுவலகங்களையும் மூடவும் உத்தரவிட்டது தமிழ்நாடு அரசு.
தற்போது மிக்ஜாம் புயல் சென்னையில் இருந்து 190 கிமீ தொலைவு விலகி ஆந்திராவில் இன்று கரையைக் கடக்க இருக்கிறது. இருந்த போதும் சென்னையில் மிக்ஜாம் புயல் மழை வெள்ள பாதிப்பு நீடிக்கிறது.
இதனையடுத்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள், அனைத்து தனியார் நிறுவனங்களுக்கும் முன்னெச்சரிக்கையாக இன்றும் 2-வது நாளாக பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனம், அலுவலகங்களுக்கும் பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. பால், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளில் எந்த பாதிப்பும் இருக்காது எனவும் அரசு தெரிவித்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications