கரையை கடந்தது ரெமல் புயல்.. வடக்கு நோக்கி நகர்ந்து.. படிப்படியாக வலுவிழக்கும் என அறிவிப்பு
சென்னை: வங்கக்கடலில் உருவான ரெமல் புயல், நேற்றிரவு மேற்கு வங்கம் மற்றும் வங்கக்கடலுக்கு இடையே கரையை கடந்திருக்கிறது. இருப்பினும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவித்திருக்கிறது.
25ம் தேதி காலை மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு திசையில் நகர்ந்து, வடக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், நேற்று மாலை 17.30 மணி அளவில் 'ரீமல்' புயலாக வலுப்பெற்று, நேற்று (26-05-2024) காலை 05.30 மணி அளவில் "தீவிர புயலாக" வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது. இது 26ம் தேதி காலை 08.30 மணி அளவில் வடக்கு வங்கக்கடல் பகுதிகளில், வங்கதேச-கேப்புப்பாராவிற்கு, தெற்கு-தென்மேற்கே சுமார் 260 கி.மீ தொலைவிலும், வங்கதேச-மங்லாவிற்கு, தெற்கே சுமார் 310 கி.மீ தொலைவிலும், மேற்கு வங்காளம்- சாகர் தீவிற்கு, தெற்கு-தென்கிழக்கே சுமார் 280 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டிருந்தது.

இது மேலும், வடக்கு திசையில் நகர்ந்து, நேற்று நள்ளிரவு, வங்க தேச கேப்புப்பாராவிற்கும், மேற்கு வங்காளம் சாகர்தீவிற்கும் இடையே, வங்கதேச-மங்லாவிற்கு அருகில் கரையை கடக்கக்கூடும் என வானிலை மையம் எச்சரித்திருந்தது. அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 110 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 135 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் கூறியிருந்தது.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை மேற்கு வங்கம் மற்றும் வங்க தேசத்திற்கு இடையில் புயல் கரையை கடந்தது. இதனால் இந்த பகுதியில் பலத்த மழையுடன் சூறைக்காற்றும் வீசியிருக்கிறது.
புயல் தொடர்பாக ஏற்கெனவே எச்சரிக்கப்பட்டிருந்ததால், போதுமான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த புயல் மேலும் வடக்கு மற்றும் வடகிழக்கு நோக்கி நகர்ந்து தீவிர புயலிலிருந்து, புயலாக வலுவிழக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.
புயல், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 13 கிமீ வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து, வங்கதேசம் மற்றும் மேற்கு வங்கக் கடற்கரையை ஒட்டிய சாகர் தீவுகளுக்கும் கெபுபாராவுக்கும் இடையே மோங்லாவின் தென்மேற்கே நிலை கொண்டிருக்கிறது. இது கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழக்கும்.
-
மகளிர் நிதி உதவித் திட்டம்.. 30 லட்சம் போலி பயனாளிகள்? மேற்கு வங்க சுவேந்து அதிகாரி உடனடி ஆக்ஷன் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications