வானிலை மையம் Vs மனோ தங்கராஜ்- துல்லிய மழை எச்சரிக்கை வருமா? கீறல் விழுந்த ரெக்கார்டு மாறுமா?
சென்னை: வானிலை முன்னறிவிப்பில் துல்லியம் இல்லை என தமிழ்நாடு அமைச்சர் மனோ தங்கராஜ் எழுப்பியிருக்கும் கேள்வி பல்வேறு விவாதங்களை எழுப்பி இருக்கிறது.
தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் வரலாறு காணாத பெருமழை கொட்டித் தீர்த்துள்ளது. காயல்பட்டினத்தில் மட்டும் ஒரு ஆண்டு முழுவதும் பெய்ய வேண்டிய பெருமழை ஒரே நாளில் 95 செமீ பதிவாகி இருக்கிறது. தென் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் சராசரியாக 30 செமீ மழை பெய்திருக்கிறது. இதனால் வரலாறு காணாத பெருவெள்ளத்தை தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி எதிர்கொண்டிருக்கின்றன.

அமைச்சர் மனோ தங்கராஜ்: இந்த நிலையில் தமிழ்நாடு அமைச்சர் மனோ தங்கராஜ், வானிலை முன்னறிவிப்பில் துல்லியம் இல்லை என குற்றம்சாட்டி இருக்கிறார். அமைச்சர் மனோ தங்கராஜின் இந்த கருத்து பெரும் விவாதத்துக்குரியதாகி இருக்கிறது. சென்னையில் நேற்று வானிலை ஆய்வு மண்டல துணைத் தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பின் போதும் இதே போல ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. அதாவது 95 செமீ மழை பெய்யும் என்கிற கணிப்பை ஏன் வானிலை மையத்தால் முன்னரே தெரிவிக்க முடியாமல் போனது என்கிற கேள்வி முன்வைக்கப்பட்டது.
வானிலை அறிவிப்புகள் என்ன?: அப்போது பாலச்சந்திரன் விளக்கம் தந்தார். அவரது விளக்கமானது, வானிலை மையமானது "வாய்ப்புள்ளது' என்ற அடிப்படையில் கணிப்புகளைத்தான் தருகிறது. அந்த கணிப்பும் கூட 3 அடிப்படைகளைக் கொண்டது. மஞ்சள் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், ரெட் அலர்ட் ஆகிய முன்னெச்சரிக்கைகளைத்தான் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு வருகிறது என்கிறார். அதாவது பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாத கனமழை (Heavy Rain Fall) 7 முதல் 11 செமீ மழை வரை பெய்யக் கூடிய வாய்ப்புள்ள பகுதிகளுக்கு மஞ்சள் அலர்ட்; 12 செமீ முதல் 20 செமீ மழை பெய்யக் கூடிய மிக கனமழை (Vey Heavy Rain Fall) வாய்ப்புள்ள இடங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்படுகிறது. 21 செமீக்கும் அதிகமான அதி தீவிர கனமழை பெய்யக் கூடிய இடங்களுக்கு (Exceptionally Heavy Rainfall) சிவப்பு அலர்ட் விடுக்கப்படுகிறது. 21 செமீ-க்கு மேல் எத்தனை செமீ மழையாகவும் இருக்கலாம்; 21 செமீ க்கு மேல் மழை பெய்யும் என்பது வரைதான் வானிலை மையத்தின் கணிப்பு அறிவிப்பு இருக்கும் என்றார் பாலச்சந்திரன்.
ஏன் கிளம்புது விவாதம்?: இந்திய வானிலை மையங்களின் கட்டமைப்பு அல்லது விதிகள் இப்படியானதாக இருக்கலாம். ஆனால் தென் மாவட்டத்தில் ஒரே ஒரு நாளில் 95 செமீ மழை பதிவாகி இருக்கிறது. இதற்கு முன்னர் மிக்ஜாம் புயலின் போது சென்னை உள்ளிட்ட இடங்களில் 50 செமீ-க்கும் அதிகமான மழை பதிவானது. அண்மைய பருவ நிலை மாற்றங்களினால் இத்தகைய அதீத மழைக்கு சாத்தியங்கள் இருக்கிறது என்பது நிரூபணமாகி இருக்கிறது. இதனை எச்சரிக்க வேண்டிய கடமை வானிலை மையத்துக்கு உண்டு என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பு. வெறும் 21 செமீ மழைக்கு மேல் எவ்வளவும் பெய்யலாம் என வானிலை மையம் ஒதுங்கிக் கொண்டால் அரசு நிர்வாகம் எப்படி முன்னெச்சரிக்கை, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள முடியும் என்பதுதான் அரசு தரப்பு கேள்வி. இதனையே அமைச்சர் மனோதங்கராஜ் முன்னெழுப்பியுள்ளார்.
3 காரணங்களால் பெருமழை: மேலும் சென்னை வானிலை ஆய்வு மைய முன்னாள் இயக்குநர் ரமணம் நேற்று பேட்டி ஒன்றில் கூறுகையில், பொதுவான வடகிழக்கு பருவமழை குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்யும் வடகிழக்கு பருவமழை, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமான மழை மற்றும் இலங்கை அருகே காற்றழுத்த தாழ்வு உருவாக்கத்தால் ஆன மழை இவை அனைத்தும்தான் தென் மாவட்டங்களின் பெருமழைக்குக் காரணம் என்கிறார்.

179 கிளைநதிகளுடன் தாமிரபரணி: திருநெல்வேலியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சூர்யா சேவியர் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், தாமிரபரணியின் கிளைநதிகளே 179 இருக்கின்றன. இந்த நதிகளின் பெருவெள்ளம், அணைகளின் நீர் திறப்பு, இவற்றுடன் இயல்பான மழை வெள்ளம் இணைந்துதான் தாமிரபரணியில் தற்போது பெருவெள்ளமாகி இருக்கிறது எனவும் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
பொதுமக்களின் வேண்டுகோள்: இத்தனையையும் மிக துல்லியமாக இல்லாவிட்டாலும் முன்னெச்சரிக்கையாக சொல்லி இருக்க வேண்டியது வானிலை மையம்தான். வெறும் சிவப்பு அலர்ட் கொடுத்துவிட்டோம் என்பதுடன் நிற்காமல் இலங்கை பக்கம் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உள்ளது; வடகிழக்கு பருவமழையும் சேர்ந்து உள்ளது என்றெல்லாம் விவரித்திருக்க வேண்டியது வானிலை ஆய்வு மையத்தின் கடமை என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பு. இதனைத்தான் அமைச்சர் மனோ தங்கராஜும் முன்னெச்சரிக்கை துல்லியமாக இல்லையே என்கிற ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆகையால் காலச் சூழலுக்கு ஏற்ப வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கைகள், முன்னெச்சரிக்கைகள் இருக்க வேண்டுமே தவிர கீறல் விழுந்த ரெக்கார்டுகளாக இருக்கக் கூடாது என்பதே பொதுமக்களின் வேண்டுகோள்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications