வங்க கடலில் ஹாமூன் புயல்! ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகிறது- 9 துறைமுகங்களில் புயல் கூண்டுகள்!
சென்னை: வங்க கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியான மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே தமிழ்நாட்டின் 9 துறைமுகங்களில்1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன.
நாட்டின் வடகிழக்கு பருவமழை நேற்று சனிக்கிழமை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அரபிக் கடலில் மையம் கொண்டிருக்கும் தேஜ் புயல் மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் என அச்சம் நிலவியது.

தேஜ் புயல்: ஆனால் தேஜ் புயல் தற்போது, தென்மேற்கு அரபிக் கடலில் வடமேற்கு திசையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இது அக்டோபர் 22 (இன்று) மாலைக்குள் அதிதீவிர புயலாக உருமாறும். ஏமன் (யேமன்) நாட்டின் சொகோட்ராவில் இருந்து 380 கி.மீ. தொலைவிலும் ஓமனின் சலாலாவின் தெற்கு- தென்கிழக்கில் 730 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டிருக்கிறது. இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை: இதனிடையே தென்கிழக்கு வங்க கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தென்மேற்கு- தென்கிழக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நகர்ந்து மத்திய மேற்கு வங்கக் கடற்பரப்பில் அடுத்த 24 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகிறது. இது நாளை அல்லது மறுநாள் புயலாக வலுவடையக் கூடும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

எங்கே இருக்கிறது?: மேற்கு மத்திய வங்க கடலில் ஒடிஷாவின் பாரதீப்புக்கு தெற்கே 610 கி.மீ. தொலைவிலும் மேற்கு வங்கத்தின் டிகாவுக்கு தெற்கே 760 கி.மீ. தொலைவிலும் இந்த காற்றழுத்த தாழ்வு நிலை மையம் கொண்டிருக்கிறது.
ஹாமூன் புயல்: வங்க கடலில் புதியதாக உருவாகும் புயலுக்கு ஹாமூன் என பெயரிடப்பட இருக்கிறது. இந்த புயலானது அடுத்த 3 நாட்களில் வடமேற்கு திசையில் நகர்ந்து மேற்கு வங்கம்- வங்கதேசம் இடையே கரையைக் கடக்கக் கூடும் எனவும் கணிக்கப்பட்டு வருகிறது. ஹாமூன் புயலால் சென்னை உள்ளிட்ட வட தமிழகம் கன மழையை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது. ஆந்திரா, ஒடிஷாவில் தசரா/ நவராத்திரி கொண்டாட்டங்களை ஹாமூன் புயல் பாதிப்பை ஏற்படுத்தலாம் எனவும் அச்சம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று முதல் அக்டோபர் 24-ந் தேதி வரை இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Depression over westcentral Bay of Bengal lay centered at 0230 IST of 22nd Oct about 610 km south of Paradip (Odisha), 760 km south of Digha (West Bengal), and 980 km SSW of Khepupara (Bangladesh). Likely to further intensify into a deep depression during next 24 hours. pic.twitter.com/RMqkmvHGUI
— India Meteorological Department (@Indiametdept) October 22, 2023
8 மாவட்டங்களில் கனமழை: இதனிடையே சென்னை, செங்கல்பட்டு, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
9 துறைமுகங்களில்.. : மேலும் தமிழ்நாட்டின் 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டுகளை ஏற்றவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. இதனையடுத்து சென்னை உட்பட 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications