அதிகரிக்கும் பனிமூட்டம்.. வட மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்! டெல்லியில் 110 விமானங்களின் சேவை பாதிப்பு
டெல்லி: வட மாநிலங்களில் கடும் பனி மூட்டம் நிலவி வரும் நிலையில் வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கையை விடுத்திருக்கிறது. பனிமூட்டம் காரமணாக ரயில் மற்றும் விமான சேவை பாதிக்கப்பட்டிருக்கிறது. டெல்லியில் ஏறத்தாழ 110 விமானங்களின் வருகை, புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது.
வழக்கமாக டிசம்பர் தொடங்கி ஜனவரி வரை நாடு முழுவதும் பனி மூட்டம் இருக்கும். ஆனால் இந்த முறை இதுவரை இல்லாத அளவுக்கு பனி பெய்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி டெல்லியில் 7 டிகிரி அளவுக்கு குளிர் நிலவி வருகிறது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால், வாகனங்கள் சிறு சிறு விபத்தில் சிக்கியுள்ளன. சாலையோரம் இருப்பவர்களை, மாநகராட்சி நிர்வாகம் பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளது. அதேபோல காற்றின் தரமும் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது.

பனி மூட்டம் அதிகமாக இருப்பதால் டெல்லி விமான நிலையத்தில் 110 விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு தாமதமாகியுள்ளது. ரயில் சேவையும் கடும் பனி மூட்டத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இந்த வானிலை சூழல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதாவது, டெல்லியில் பனி மூட்டத்திற்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஹரியானா, சண்டிகர், பஞ்சாப், உத்தரப் பிரதேசம், ஒடிசா, மேகாலயா, நகாலாந்து, மணிப்பூர் மற்றும் மிசோரம் மாநிலத்திலும் கடும் பனி மூட்டம் நிலவி வருகிறது.
இந்த காலங்களில் வழக்கமாக பனி மூட்டம் இருப்பது இயல்புதான். ஆனால், இந்த முறை இயல்பைவிட அதிமாக பனிமூட்டம் இருப்பதாக மக்கள் கூறுகின்றனர். பருவநிலை மாற்றம் காரணமாக கூட இது போன்று கடும் பனிமூட்டம் நிலவலாம் என்றும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் பனிமூட்டம் தொடர்பாக ரெட் அலர்ட்டை கொடுத்திருக்கிறது. வட மாநிலங்களில் டிச.31ம் தேதிவரை மூடுபனியின் தாக்கம் தீவிரமாக இருக்கும் என்றும், குறிப்பாக டெல்லி, பஞ்சாப், ஹரியானாவில் பனியின் தாக்கம் அதிகமாக இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
-
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications