மிதக்கும் சேலம்.. புரட்டிப்போட்ட மழையால் வீடுகளில் நுழைந்த தண்ணீர்! சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம்
சேலம்: சேலத்தில் இன்று மாலையில் இடைவிடாது 2 மணிநேரம் கனமழை கொட்டித்தீர்த்தது. இந்த மழையின் காரணமாக சேலம் மாநகரில் உள்ள மழைநீர் மற்றும் சாக்கடை நீர் கலந்து வீடுகளுக்குள் நுழைந்தது. அதேபோல் மழைநீர் வெளியேற முடியாமல் தேங்கியதால் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து, வட தமிழகம், புதுவை மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை நோக்கி, அதற்கடுத்த 48 மணி நேரத்தில் நகரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

மேலும் இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று வானிலை மையம் கணித்து இருந்தது. அதுமட்டுமின்றி மாவட்ட வாரியாக பார்த்தால் தஞ்சாவூர், திருவாரூர், மதுரை, தேனி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தர்மபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், திருப்பூர், கோயம்புத்தூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று கோவையில் 2 மணிநேரம் மழை கொட்டித்தீர்த்தது. அதேபோல் சேலத்திலும் கனமழை வெளுத்து வாங்கியது.
சேலத்தில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதன்பிறகு வானிலை நிலவரம் மொத்தமாக மாறியது. இன்று மதியம் சுமார் 2.30 மணியளவில் சேலம் மாநகரில் மழை கொட்ட தொடங்கியது. தொடக்கத்தில் லேசாக பெய்ய தொடங்கிய மழை சிறிது நேரத்தில் கனமழையாக மாறி கொட்டித்தீர்த்தது.
குறிப்பாக சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, பச்சப்பட்டி, கிச்சிபாளையம், முகமதுபுரா உள்ளிட்ட இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. சுமார் 2 மணிநேரம் வரை மழை இடைவிடாது பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. மெயின் ரோடுகளில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளித்தது.
அதுமட்டுமின்றி தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் நுழைந்தது. குறிப்பாக முகமதுபுரா பகுதியில் மழைநீர் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் கழிவுநீரோடு மழைநீர் சேர்ந்து வீடுகளுக்குள் நுழைந்தது. துர்நாற்றம் வீசியது. அதேபோல் சாலையோரம் உள்ள கடைகளுக்குள்ளும் மழைநீர் நுழைந்தது. கடை, வீடுகள் என்று 100க்குமான கட்டங்களில் மழைநீர் நுழைந்துள்ளது.
திடீரென்று பெய்த இந்த மழையின் காரணமாக சேலம் மாநகர மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். வீடுகளுக்குள் நுழைந்த தண்ணீரை வெளியேற்றுவது, சாலைகளில் தேங்கிய நீரில் நடந்து செல்வது என்பது கடும் சிரமத்தை அவர்கள் எதிர்கொண்டனர். இந்த பிரச்சனைக்கு மாநகராட்சி அதிகாரிகளின் அலட்சியம் தான் காரணம் என்று கூறப்படுகிறது. அதாவது கால்வாய்களை முறையாக துர்வாராமல் இருந்ததால் தான் மழைநீர் மற்றும் சாக்கடை நீர் ஒன்றாக சேர்ந்து வீடுகளுக்குள் நுழைந்துள்ளதாக அந்த பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
-
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications