விடாமல் விரட்டும் கனமழை.. இடையில் இபி போர்ட் போட்ட போடு.. ஆகா இதை கவனிக்கலையே.. குட் நியூஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னையில் 29.11.2023ம் தேதி அன்று குறுகிய நேரத்தில் சராசரியாக 15 செ.மீ. மழை பெய்த போதிலும் தமிழ்நாட்டில் எங்கும் மின்சார தடையே ஏற்படவில்லை. முக்கியமாக சென்னையில் மின் தடையே ஏற்படவில்லை.

இது தொடர்பாக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் படியும், நிதி, திட்டமிடல் மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வழிகாட்டுதலின் படியும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் காரணமாக தமிழ்நாடு முழுவதும் சிறப்பு மின் பராமரிப்பு பணிகள் 19.07.2023 அன்று தொடங்கப்பட்டு 29.11.2023 வரை நடைபெற்று 11,47,103 பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளது.

EB board important order amid the Heavy rain alert for Tamil Nadu

1545 துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. 6,25,341 மரக்கிளைகள் மின்வழித்தடங்களில் இருந்து அகற்றப்பட்டது. 55,830 பழுதடைந்த மின்கம்பங்கள் புதிதாக மாற்றப்பட்டுள்ளது.

மின்சார வாரியம்: சென்னையில் கடந்த 8 ஆண்டுகளில் கண்டிராத அளவு மிக கனமழை 29/11/2023 பெய்த போதிலும், 240 துணை மின் நிலையங்களில் உள்ள 1,877 மின்பாதைகள் மூலம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களது அறிவுரையின் படி தடையற்ற மற்றும் சீரான மின்சாரம் வழங்கப்பட்டது. கனமழையினால் 8 மின்பாதைகளில் பழுது ஏற்பட்ட போதிலும் உடனடியாக மாற்றுப்பாதையில் சுமார் அரை மணி நேரத்தில் மின்னூட்டம் வழங்கப்பட்டு, பழுதுகளும் சரிசெய்யப்பட்டது. சென்னையில் உள்ள 41,311 மின்மாற்றிகளில் மின்மாற்றிகளில் மட்டும் பழுது ஏற்பட்டது. அவைகளும் உடனடியாக பழுதுகள் சரிசெய்யப்பட்டு வழங்கப்பட்டது.

மின்சாரம் சென்னையில் சென்ற ஆண்டு மழையின் போது நீர் தேங்கிய பகுதிகளில் கண்டறியப்பட்ட 4658 பில்லர் பாக்ஸ்களின் உயரம் ஒரு மீட்டர் அளவிற்கு உயர்த்தப்பட்டதால் தற்போது மேற்படி பகுதிகளில் பாதுகாப்பான தடையற்ற சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், பருவ மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு முழுவதும் 3,00,887 மின்கம்பங்கள். 14,187 கி.மீ. மின் கம்பிகள், 19,759 மின்மாற்றிகள் மற்றும் மின் தளவாடப் பொருட்கள் கையிருப்பில் உள்ளது. மின்தடை ஏற்பட்டால் உடனுக்குடன் சரி செய்ய 15,300 களப்பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

பொதுமக்கள் மின்தடை சம்பந்தமான புகார்களை மின்னக எண்.94987 94987 வாயிலாக ஒரே நேரத்தில் 65 புகார்களை பதிவு செய்து மேல் நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், அனைத்து மின் பகிர்மான வட்ட மின்தடை நீக்கம் மையம் வழியாகவும் புகார்களை தெரிவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

வானிலை அறிவிப்பு: தமிழ்நாடு முழுக்க இன்று கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. சென்னை , திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று 30-ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது அதற்கடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெற கூடும். தென்இலங்கை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+