ஈரோட்டில் இறங்கிய இடி.. இன்னைக்கும் சம்பவம் இருக்கு! வெதர்மேன் வார்னிங்
ஈரோடு: நேற்று ஈரோட்டில் கனமழை வெளுத்து வாங்கியிருந்தது. தமிழகத்தில் பரவலாக வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், ஈரோட்டில் மட்டும் மழை பெய்திருந்தது. இந்நிலையில் இன்றும் கொங்கு உட்பட சில மாவட்டங்களில் மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது x பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, "தென் தமிழ்நாட்டில் நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி பகுதிகளில் கடந்த இரு நாட்களாக ஆங்காங்கே மிதமான மழை பதிவாகியுள்ளது. இன்றும் மழை தொடரும்.

வெதர்மேன் அப்டேட்
குறிப்பாக மதுரை, தூத்துக்குடி, விருதுநகர், திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, சிவகங்கை மாவட்டங்கள் உட்பட, பல தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. கொங்கு மண்டலத்தின் திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரியில் மழை தொடரும்.
அத்துடன் ராமநாதபுரம் உள் பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இம்மேகங்கள் பின்னர் கேரளாவுக்கு நகர்ந்து அங்கும் மழை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது" என பதிவிட்டிருக்கிறார்.
திடீர் மழைக்கு காரணம்
பூமத்திய ரேகை பகுதிக்கு அருகே, இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வந்தது. இது தற்போது வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியிருக்கிறது. இப்படி நடப்பது கொஞ்சம் ரேர் சம்பவம்தான். இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது கரை நோக்கி நகரும் போது, கையோடு ஈரப்பதம் கொண்ட காற்றை அழைத்து வருகிறது. இந்த காற்றுதான் மழைக்கு காரணம்.
எங்கெல்லாம் மழை பெய்யும்
ஈரப்பதம் மிக்க காற்று டெல்டா மாவட்டங்களை தாண்டிதான் போகும். ஆனால் டெல்டாவில் மழை பெய்யாது. காரணம், காற்று மேலே எழும்பினால்தான் இன்னும் குளிர்ந்து மழை பெய்யும். டெல்டாவில் மலைகள் கிடையாது என்பதால், ஈரப்பதம் மிக்க காற்று மேற்கு தொடர்ச்சி மலை உள்ள பகுதிகள் வரை சென்று பின்னர், மலை மீது மோதுகிறது. இதனால் இந்த மலையை ஒட்டிய தென் மாவட்டங்களில் மழை பெய்கிறது.
-
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications