அடுத்த 2 மணி நேரம்.. விடாமல் வெளுத்து வாங்கப் போகுது மழை.. 11 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்
சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை விடாமல் வெளுத்து வாங்க வாய்ப்பு உள்ளதாக 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். கோவை, நீலகிரி, தென்காசி, சேலம், திருவண்ணாமலை உள்பட 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. தற்போது சேலம் மாவட்டத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக தென் மாவட்டங்களான நெல்லை, குமரி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் கோவை, நீலகிரி, தேனியில் கனமழை வெளுத்து வாங்கியது. இன்று காலையில் இருந்து மதியம் வரை பல்வேறு மாவட்டங்களில் வெயில் கொளுத்தி எடுத்தது.

அடுத்த 2 மணி நேரம்
இந்த நிலையில் மாலையில் சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. ஆத்தூர், நரசிங்கபுரம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. இதேபோன்று நீலகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்குகிறது. இந்த நிலையில் அடுத்த 2 மணி நேரத்தில் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் அதாவது இரவு 7 மணி வரை, நீலகிரி, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதியை ஒட்டிய இடங்கள், தேனி, தென்காசி, ஈரோடு, சேலம், நாமக்கல், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் கூறியுள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி
முன்னதாக வானிலை மையம் வெளியிட்டிருந்த அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- நேற்று (26-09-2025) காலை, வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மாலை 17.30 மணி அளவில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தெற்கு ஒரிசா வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது.
இன்று (27-09-2025) காலை, 04.30 மணி அளவில் தெற்கு ஒரிசா கடற்கரையை கோபல்பூர் அருகில் கடந்து, காலை, 08.30 மணி அளவில் தெற்கு ஒரிசாவின் உள் பகுதிகளில் நிலவியது. இது மேலும், மேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஒரிசா சத்தீஸ்கர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வழுவிழக்கக்கூடும்.
3 ஆம் தேதி வரை மழைக்கு சான்ஸ்
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
செப்.28 முதல் அக்.3 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் கிளைமேட் எப்படி
சென்னையில் இன்று (27-09-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
சென்னையில் நாளை (28-09-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications