டிச., 11 - 12ம் தேதி கனமழை.. பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கும் அளவுக்கு இருக்குமா? வெதர்மேன் வார்னிங்
சென்னை: டிசம்பர் 11, டிசம்பர் 12 ஆகிய தேதிகளில் டெல்டாவின் வடகடலோர மாவட்டம் முதல் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணித்துள்ள நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை விடும் அளவுக்கு இந்த மழை இருக்குமா? என்பது பற்றிய முக்கிய தகவலை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. பெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்கள், வடக்கு மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்தது. அதில் இருந்து பொதுமக்கள் இப்போது தான் மீண்டுள்ளனர். இதற்கிடையே தான் தற்போது தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 11 ம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை தமிழகம் கடலோரப் பகுதிகளையொட்டி நிலவக்கூடும். இதனால் தமிழகத்தில் வரும் 10ம் தேதி முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தான் தமிழகத்தில் டிசம்பர் 11ம் தேதி முதல் டிசம்பர் 14 வரை எங்கெல்லாம் மழை பெய்யும். இந்த மழை என்பது பள்ளி விடுமுறை விடும் அளவுக்கு இருக்குமா? என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் டெல்டாவின் வட கடலோர மாவட்டங்கள் முதல் காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் டிசம்பர் 11 மற்றும் 12ம் தேதிகளிலும், தென்மாவட்டங்கள் மற்றும் உள்தமிழக மாவட்டங்களி்ல 13 மற்றும் 14 ஆகிய தேதிகளிலும் மழை பெய்ய உள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக சென்னை மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஏரியாக்களில் டிசம்பர் 11 மற்றும் 12ம் தேதிகளில் கனமழை பெய்யும். ஆனால் அந்த மழை என்பது மக்களால் சமாளிக்க கூடிய வகையில் தான் இருக்கும். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் நல்ல மழை கிடைக்கும்.
அதேபோல் நாகை, காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், பாண்டிச்சேரி கடற்கரை பகுதிகளிலும் கனமழை என்பது பெய்யும். தற்போது உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறுமா என்றால் அதற்காகனா வாய்ப்பு மிக குறைவு தான். இதனால் பெஞ்சல் புயல் போன்ற பாதிப்பு ஏற்படாது.
தென்தமிழகத்தை எடுத்து கொண்டால் தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் நெகட்டிவ்வான (மழை இருக்காது) சூழல் உள்ளது. அதேவேளையில் ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் டிசம்பர் 13 ம்றும் டிசம்பர் 14 ஆகிய தேதிகளில் மழை இருக்கும். இந்த மழை என்பது வடதமிழக கடலோர மாவட்டங்களில் பெய்யும் கனமழையை ஒப்பிடும்போது குறைவாகவே இருக்கும்.
தேர்வு என்பது நடந்து வருகிறது. இதனால் அனைவரும் நன்கு படிக்க வேண்டும். விடுமுறை வழங்கப்படுமா? என்று டிவிக்கு க்ளூ இருக்காது. கனமழை நாட்களில் இரவில் பெய்த மழை மற்றும் மேற்கொண்டு பெய்யும் மழையை பொறுத்தே அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் விடுமுறையை அறிவிப்பார்கள். இதனால் தேர்வுக்கு நன்றாக படிக்க வேண்டும்'' என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications