டெல்டா முதல் தூத்துக்குடி வரை.. 2 நாள் கனமழை இருக்கு.. வெதர்மேன் வார்னிங்! அப்போ சென்னை கிளைமேட்?
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே குளிர் அதிகரித்து, மழை குறைந்துள்ளது. இதனால் பொங்கல் அறுவடை எந்தவொரு இடத்திலும் சிக்கல் இல்லாமல் இருந்தது. இதற்கிடையே தமிழ்நாட்டில் வரும் நாட்களில் எங்கு மழை பெய்யும் என்பது குறித்த தகவல்களைத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் பகிர்ந்துள்ளார்.
கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் மழை குறைந்து குளிர் அதிகரித்துள்ளது. இதனால் காலை நேரங்களில் வாகனங்களை இயக்குவதில் சிரமம் இருக்கிறது. அதேநேரம் மழை இல்லாததால் பொங்கல் அறுவடை எங்கும் பாதிக்கப்படவில்லை.

வெதர்மேன் பிரதீப் ஜான்:
அதேநேரம் தமிழகத்தில் வரும் நாட்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார். எப்போது மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.. எங்கு மழை பெய்யும் என்பது தொடர்பாக வெதர்மேன் பிரதீப் ஜான் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
இரண்டு நாட்கள் மழை:
இது தொடர்பாகத் தமிழ்நாடு தொடர்பாகத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்த பொங்கல் சமயத்தில் யுஏசி எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. இது விவசாயிகளின் அறுவடையைப் பாதிக்கவில்லை. ஆனால், அடுத்து ஜனவரி 19/20 தேதிகளில் காலநிலை மாறும். இதன் காரணமாக இரண்டு நாட்கள் என்றாலும் கனமழை பெய்யும்.
இதற்கான காரணம்.. 19/20 அன்று மேற்கு மற்றும் கிழக்கில் இருந்து வரும் காற்று மோதுவதால் தமிழகத்தின் மீது - கடலூரில் இருந்து டெல்டா- தூத்துக்குடி பகுதிகள், கடலோர பகுதிகள் மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடகிழக்கில் ஆன்டிசைக்ளோன் (உயர் அழுத்தம்), வடமேற்கில் வேஸ்டர்ட் டிஸ்டர்பன்ஸ், தென்கிழக்கில் ஆன்டிசைக்ளோன் ஆகியவை ஏற்படும் போது, எப்போதும் தீவிர வெப்பச்சலனம் காரணமாக (மழை மேகங்கள்) உருவாகும்.
கனமழை இருக்கு:
எம்ஜிஓ அதிவேகமாக நமது பேசின் பகுதியில் நுழைகிறது. வேஸ்டரன் டிஸ்டர்பன்ஸ் சரியான நேரத்தில் நுழைவதன் மூலம் வலுவான எம்ஜிஓ ஏற்படும். எனவே, ஜனவரி 19 மற்றும் 20 தேதிகள் தமிழக கடலோர மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களுக்கு முக்கியமானதாக இருக்கும். கேடிசிசி (சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர்) மாவட்டங்களில் ஒரு நாள் மிதமான மழை பெய்யும்.. அதிர்ஷ்டவசமாகத் தென் சென்னை பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மழை எப்படிப் பெய்யும் என்பது தொடர்பாக வரும் நாட்களில் நமக்கு மேலும் தெளிவு கிடைக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.
வானிலை மையம்:
முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட தினசரி செய்திக்குறிப்பில், "கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜனவரி 16, 17 தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஜனவரி 18ம் தேதி கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை கிளைமேட்:
சென்னையைப் பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30-31" செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24" செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று அதில் கூறப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications