பகலில் வாட்டி வதைத்த வெயில்.. இரவில் கொட்டிய கனமழை.. சென்னையை குளிர்வித்த வருண பகவான்
சென்னை: சென்னையில் இன்று பகலில் கடுமையான வெப்பம் வாட்டி வதைத்தது. வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்த நிலையில் இரவில் கிளைமேட் அப்படியே தலைகீழாக மாறியது. இரவு 10 மணிக்கு மேல் சென்னையில் பல்வேறு இடங்களிலும் கனமழை கொட்டி தீர்த்தது.
சென்னை உள்பட தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை சென்னையில் இரவு நேரத்தில் மழை பெய்தது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில பகுதிகளில் மாலை நேரத்தில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்து இருந்தது.

சென்னையில் இன்று பகலில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருந்தது. இதனால், பகல் வேளையில் வெயிலின் தாக்கத்தால் மக்கள் அவதிப்பட்டனர். இந்த நிலையில், இரவு 10 மணிக்கு மேல் திடிரென்று கனமழை கொட்ட தொடங்கியது. இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது.
சென்னை எழும்பூர், சென்ட்ரல், கோயம்பேடு, அமைந்தகரை, அண்ணாநகர், கிண்டி, ஈக்காட்டு தாங்கல், வடபழனி, முகப்பேறு என பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் மழை நீரும் தேங்கியதால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையமும் சென்னையில் இரவு மழை பெய்யக்கூடும் என்று அறிவிப்பு வெளியிட்டிருந்தது. பகல் நேரங்களில் சென்னையில் வெயில் கொளுத்தி எடுத்த நிலையில் இரவு நிலைமை அப்படியெ தலைகீழாக மாறி பல்வேறு இடங்களில் கனமழை பெய்ததால் சென்னை மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications