டெல்லியில் கொட்டித் தீர்க்கும் கனமழை! வீடுகளைச் சூழ்ந்த வெள்ளம்! எங்கு பார்த்தாலும் தண்ணீர் தான்!
டெல்லி: இந்தியாவின் தலைநகரான டெல்லியில் கடந்த சில நாட்களாகவே கனத்த மழை பெய்து வருகிறது. இதில் பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதன் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதோடு எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. பருவமழை தீவிரமடைந்திருப்பதின் காரணமாக தமிழ்நாட்டின் கோவை, நீலகிரி, தென்காசி ஆகிய பகுதிகளிலும் கேரளாவின் வயநாடு மலப்புறம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

இதேபோல டெல்லி, உத்தர பிரதேசம், ஹரியானா ஆகிய பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக டெல்லி என்சிஆர், நொய்டா உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐஏஎஸ் பயிற்சி மையத்திற்குள் வெள்ள நீர் புகுந்தால் மூன்று மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இது மட்டும் அல்லாமல் இதுவரை டெல்லியில் மழை காரணமாக 11 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த நிலையில் வழக்கம் போல இன்றும் டெல்லியில் கனமழை கொட்டி தீர்த்தது. இரவு 8 மணியில் இருந்து சுமார் 11 மணிக்கு உள்ளாகவே 11 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. தொடர் மழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் தேங்கியுள்ளது. டெல்லி விகார் பகுதியில் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்திருக்கும் நிலையில் அதில் பலர் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மேலும் சாலை முழுவதும் வெள்ளநீர் பாய்ந்தோடி வரும் நிலையில் போக்குவரத்து முடங்கியுள்ளது. வேலை முடிந்து வீட்டிற்கு செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் தத்தளித்தபடி பயணம் மேற்கொண்டனர். இன்னும் மூன்று மணி நேரத்திற்கு டெல்லியில் கனமழை பெய்யும் எனவும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதுமட்டுமல்லாமல் டெல்லி, ஹரியானா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் டெல்லியில் பல பகுதிகளில் சூழ்ந்து இருப்பதால் கட்டிடங்கள் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர். குறிப்பாக டெல்லி நாடாளுமன்ற வழக்கத்திலேயே மழைநீர் சூழ்ந்து இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் டெல்லி பிரஸ் கிளப்பிற்குள் தண்ணீர் புகுந்ததால் பத்திரிகையாளர்கள் நாற்காலிகளின் மேல் அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் வெள்ள நீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை டெல்லி மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. பல இடங்களில் மின்மோட்டார்கள் மூலம் வெள்ள நீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் துரிதப் படுத்தப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications