"ஹெவி ரெயின்".. தட்டி வீசப்போகுது பருவமழை.. தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா அதிரடி.. மலைத்த கலெக்டர்கள்
சென்னை: தென்மேற்கு பருவமழை குறைந்துள்ளதால், பல்வேறு மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.. இந்த தட்டுப்பாட்டை போக்க தமிழக அரசு அடுத்தக்கட்ட முயற்சியில் இறங்கி உள்ளது. இப்படிப்பட்ட சூழலில், வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தமிழக அரசு முழுமூச்சாக இறங்கி உள்ளது.
வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், அதை சமாளிப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.. இந்த நடவடிக்கையை சென்னை மாநகராட்சி சில நாட்களுக்கு முன்பே தொடங்கியது.

அதேபோல, தென்மேற்கு பருவமழை குறைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.. இந்த அபாயத்தை போக்கவே, தமிழக அரசு தயாராகி வருகிறது.
விவசாயம்: இந்த வருடம் தென்மேற்கு பருவமழை, தமிழகம் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களிலுமே குறைந்துவிட்டது.. இந்த மழைபொழிவுதான், விவசாயத்துக்கு அடிப்படையானது.. ஆனால் மழை குறைவால், பாசனம் மட்டுமின்றி குடிநீர் தேவையை சமாளிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.. இப்போதே, நிறைய மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு தலைதூக்க துவங்கிவிட்டது.. வடகிழக்கு பருவமழை ஏமாற்றினால் நிலைமை இன்னும் மோசமாகும்.
அதனால்தான், குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிப்பது குறித்து நீர்வளத்துறை, நகராட்சி நிர்வாகம் துறை, குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரிகள், 2 நாட்களுக்கு முன்பு ஆலோசனையை நடத்தியிருந்தார்கள்.. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு தலைமையில், தலைமைச் செயலகத்தில், இந்த கூட்டம் நடந்தது..
தலைமை செயலாளர்: இதையடுத்து, நிலுவையில் உள்ள, 50க்கும் மேற்பட்ட கூட்டு குடிநீர் திட்ட பணிகளை விரைவுப்படுத்துவது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என்றும், குடிநீர் பிரச்சனை ஏற்படாதவாறு, மேலும் சில திட்டங்கள் கையில் எடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.. பருவமழையை எவ்வாறு எதிர்கொள்வது, மக்களின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை மாவட்ட நிர்வாகங்கள் திட்டமிடுவது அவசியம் என்பதால், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அதில், அடுத்த சில நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் சேதம் அடைந்துள்ள பொது கட்டடங்களை அகற்றவும், பள்ளி, கல்லூரி, மருத்துவமனை மற்றும் அரசு அலுவலகங்கள் நீர்த்தேக்கங்களை கண்டறிந்து மதிப்பீடு செய்யவும் தலைமை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.
குறிப்பாக கடலோர மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது... அத்துடன், மழைக்காலத்தில் மக்கள் அவதியுறுவதை தடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications