Heavy Rain: தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
சென்னை: கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கும், 2 மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளும் இயங்காது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தென்குமரிக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக, தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. தென்தமிழக மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருகிறது.

இதுகுறித்து வானிலை மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தெற்கு அந்தமான் கடலில் நவம்பர் 22 ஆம் தேதி நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று அதே பகுதியில் நிலவியது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து இன்றுதென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.
இது மேலும் அதே திசையில் நகா்ந்து அதற்கடுத்த 48 மணி நேரத்தில் நவம்பர் 26 ஆம் தேதி தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் 'சென்யாா்' புயலாக உருவாகக்கூடும் என்று வானிலை மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நேற்று உருவானது. இதன் காரணமாக குமரிக் கடல் மற்றும் அதையொட்டிய இலங்கை-தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) நாளை (நவம்பர் 25) உருவாகக்கூடும்.
'மஞ்சள்' எச்சரிக்கை
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் நவம்பர் 29 வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகா், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், இதனால் இந்த மாவட்டங்களுக்கு 'மஞ்சள்' எச்சரிக்கை விடுத்து வானிலை மையம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
பள்ளிகளுக்கு விடுமுறை
இந்நிலையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. கன மழை காரணமாக மதுரை, நாகை, கரூர், விருதுநகர், மயிலாடுதுரை, புதுச்சேரி, திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, திருவாரூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
அதேபோல, நெல்லை, தென்காசி, புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கும், 2 மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளும் இயங்காது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடலூரில் விடுமுறை
கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார் கோவில், ஸ்ரீமுஷ்ணம் ஆகிய 4 தாலுக்காக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் பள்ளிகளுக்கு விடுமுறை
சேலத்தில் 4 தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில், பெத்தநாயக்கன்பாளையம், ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் 4 தாலுக்கா
கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார் கோவில், ஸ்ரீமுஷ்ணம் ஆகிய 4 தாலுக்காக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications