இடி, மின்னலுடன் வெளுத்துக் கொட்டிய மழை.. மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் வெள்ளம் போல் ஓடிய மழைநீர்!
சென்னை: சென்னை மட்டுமின்றி, மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் நேற்று மாலை முதல் இரவு வரை கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், சாலைகளில் வெள்ளம் போல மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
சென்னை உள்பட, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயில் கடந்த சில மாதங்களாக வாட்டி வதைத்து வந்தது. இருப்பினும், கடந்த மே மாதத்தில் ஒரு சில நாட்கள் கோடை மழை பெய்தது. இதனால் வெப்பம் ஓரளவுக்குத் தணிந்தது. இந்த நிலையில், ஜூன் மாதம் ஆரம்பித்ததை தொடர்ந்து மழை கொட்ட துவங்கியிருக்கிறது.

சென்னை உள்பட, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னரே அறிவித்திருந்தது. இந்த நிலையில், ஜூன் 5ஆம் தேதியான நேற்று, மதியம் ஆரம்பித்த கனமழை இரவு வரை விடாமல் தொடர்ந்தது.
மாலை முதல் இரவு வரை சென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இடி மின்னலுடன் மழை பெய்தது. தொடர்ந்து நீண்ட நேரம் மழை பெய்ததால் தாழ்வான சாலைகளில் தண்ணீர் தேங்கியது. குறிப்பாக சென்னை எழும்பூர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், தி நகர், கிண்டி, அண்ணாநகர், திருமங்கலம், கோயம்பேடு, வளசரவாக்கம், வடபழனி, அசோக்நகர் உள்பட பல்வேறு இடங்களில் மழை பெய்தது.
இதேபோல் சென்னை விமான நிலையம், பூந்தமல்லி, பகுதியிலும் பலத்த மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் மழைநீர் குளம் போல தேங்கியது.இதனால் பயணிகள் பெரிதும் சிரமம் அடைந்தனர்.
சென்னை குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. அந்த சாலை முழுவதுமே தண்ணீர் வடியாமல் தேங்கியதால் வாகன ஓட்டிகள் பலரும் சிரமம் அடைந்தனர். கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. சுமார் 2 கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றன.
சென்னை மட்டுமின்றி திருப்பத்தூர், ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது. கோவை, குமரி உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது. மேலும், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை விருதுநகர், தஞ்சாவூர், திருவாரூர், உள்ளிட்ட பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. சிவகங்கை மாவட்டத்தில் இரவு வரை கொட்டிய கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால், தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்ட மலைப் பகுதிகளிலும், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்துார், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களிலும் இன்று கன மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
அரசியல் என்ட்ரி? திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறாரா ராகவா லாரன்ஸ்! வெளியான முக்கிய அறிவிப்பு -
கரண்ட் பில் கட்ட கடைசி தேதி முடிஞ்சுடுச்சா? பதறாதீங்க.. இனிமேல் இப்படி ஒரு வசதி இருக்கு! -
செங்கல்பட்டு-திண்டிவனம் 6 வழிச்சாலை விரிவாக்கம்: NHAI அதிரடி திட்டம் - போக்குவரத்து நெரிசல் ஓவர்! -
ஏமாற்றம் கொடுத்த மேட்டூர்.. கைவிடாத மழை! டெல்டாவுக்கு இன்று கனமழை அலர்ட்! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன?












Click it and Unblock the Notifications