சென்னையில் வெளுத்தெடுத்த 'நள்ளிரவு 6 செ.மீ மழை'.. விமான சேவைகள் பாதிப்பு- பயணிகள் துயரம்!
சென்னை: சென்னையில் நள்ளிரவில் திடீரென கனமழை கொட்டித் தீர்த்தது. சென்னையில் பெய்த திடீர் கனமழையால் 16 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனால் பயணிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகினர்.
தமிழ்நாட்டில் காற்றின் திசை மாறுபாடு காரணமாக பல மாவட்டங்களில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. சென்னை மாநகரில் நேற்று இரவே மழை பெய்ய தொடங்கியது. சென்னையில் நள்ளிரவில் கனமழை கொட்டித் தீர்த்தது.

ஆவடியில் கடந்த 24 மணிநேரத்தில் 8 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது. மேற்கு தாம்பரத்தில் 6.2 செ.மீ. மழை பதிவானது. சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் 6.1 செ.மீ மழையும் மீனம்பாக்கத்தில் 5.6 செ.மீ. மழையும் பதிவானது.
சென்னையில் பெய்த திடீர் கனமழையால் சர்வதேச விமான சேவைகள் உட்பட மொத்தம் 16 விமான சேவைகள் பாதிப்புக்குள்ளாகின. ஆந்திராவின் விஜயவாடாவில் இருந்து 64 பயணிகளுடன் வந்த பயணிகள் விமானம், சென்னையில் கனமழையால் தரையிறங்க முடியவில்லை. இதனையடுத்து அந்த விமானம் 64 பயணிகளுடன் திருச்சிக்கு திருப்பிவிடப்பட்டது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரியில் நீர்இருப்பு 1866 மில்லியன் கனஅடியாக உள்ளது. சென்னை மாநகர குடிநீருக்காக 159 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications