நைட் முழுக்க கொட்டப் போகுது மழை.. கோவை டூ குமரி வரை 14 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்!
சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் உள்பட 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நெல்லை, தென்காசியில் இன்று பல்வேறு இடங்களில் காலை முதல் மாலை வரை மழை விட்டுவிட்டு தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில், தற்போது இன்று இரவு 10 மணி வரையும் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் கூறியுள்ளது.
தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. நெல்லை, குமரி, தென்காசி, கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி என பல்வேறு மாவட்டங்களிலும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இன்று காலையில் இருந்தே நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை விட்டு விட்டு பெய்து வந்தது.

பலத்த காற்றுடன் கூடிய மழை தொடர்ந்து பெய்து வருவதால் பல இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. மின் கம்பங்கள், மரங்கள் சாலைகளில் சாய்ந்து விழுந்து கிடந்தன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இது குறித்து வானிலை மையம் கூறியுள்ளதாவது:- தமிழகத்தில் இன்று இரவு 10 மணி வரை கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரி உள்பட 14 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications