மார்ச் 11-ல் 4 தென் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு-ஆரஞ்சு அலர்ட்-12 முதல் 20 செ.மீ கொட்டுமாம்!
சென்னை: தமிழ்நாட்டில் நாளை மார்ச் 10-ந் தேதி முதல் 4 நாட்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னையில் நாளை மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது; மார்ச் 11-ந் தேதி 8 மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும்; மார்ச் 11-ந் தேதி 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கான வாய்ப்பு உள்ளது; மிக கனமழைக்கான வாய்ப்புள்ள தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது; ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்ட இந்த மாவட்டங்களில் 12 முதல் 20 செமீ மழை பெய்யக் கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது: கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 38.2 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகி இருக்கிறது.
வெப்ப நிலை உயரலாம்: மார்ச் 10-ந் தேதி நாளை திங்கள்கிழமை வரை வெப்பநிலை அதிகரித்து காணப்படும். 2 டிகிரி முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை உயரலாம்.
வெப்ப நிலை குறையும்: மார்ச் 11-ந் தேதிக்குப் பின்னர் தமிழ்நாட்டில் வெப்ப நிலை சற்று குறையத் தொடங்கும். உள் தமிழ்நாடு, அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மார்ச் 11-ந் தேதி 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
மார்ச் 11-ல் மழைக்கு வாய்ப்பான மாவட்டங்கள்: சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், நாகை
மார்ச் 11-ல் மிக கனமழைக்கான வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்- ஆரஞ்சு அலர்ட்:
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் மார்ச் 11-ந் தேதி முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
12 செ.மீ முதல் 20 செ.மீ மழை: ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்ட இந்த 4 மாவட்டங்களில் 12 செமீ முதல் 20 செமீ மழை வரை பதிவாகக் கூடும்.












Click it and Unblock the Notifications