இன்னைக்கு மட்டும் பொறுத்துக்கோங்க.. 2 ஆம் தேதி முதல் கொளுத்த போகும் கனமழை! வானிலை மையம் ஜில் அப்டேட்
சென்னை: தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் நாளை முதல் தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளது. குறிப்பாக வரும் 2 ஆம் தேதி முதல் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 26 ஆம் தேதி முதல் வெயில் சுட்டெரித்து வருகிறது. சென்னை உள்பட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அனலை கக்கும் வெயிலால் மக்கள் பரிதவித்து வருகிறார்கள். வீட்டை விட்டு வெளியில் செல்லவே அச்சப்படுகின்றனர். இந்த நிலையில் நேற்று தமிழகத்தில் 10 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.

நாளையில் இருந்து மழைக்கு வாய்ப்பு
இந்த நிலையில் இன்றும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வெயிலின் அளவு 5 டிகிரி வரை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. மேலும் நாளை முதல் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யும் என்றும், குறிப்பாக நாளை மறுநாள் 5 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் என்றும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனால் இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். நாளை மற்றும் நாளை மறுநாள், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், தென்காசி, விருதுநகர், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் 3 ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 4 ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 5 ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
30-03-2025 மற்றும் 31-03-2025: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. 01-04-2025 முதல் 03-04-2025 வரை: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 -3° செல்சியஸ் குறையக்கூடும்.
30-03-2025 முதல் 01-04-2025 வரை : தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2-3* செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். 02-04-2025 மற்றும் 03-04-2025: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டி-இயல்பை விட சற்று குறைவாக இருக்கக்கூடும். 30-03-2025 மற்றும் 31-03-2025: அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னையில் இன்றும், நாளையும் எப்படி இருக்கும்
* சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பின் படி, இன்று (30-03-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
* நாளை (31-03-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் வெப்பநிலை நிலவரம்:
* அதிகபட்ச வெப்பநிலை:- மதுரை விமான நிலையம்: 40.0° செல்சியஸ்
* குறைந்தபட்ச வெப்பநிலை (சமவெளிப்பகுதிகளில்):- திருத்தணி: 19.5° செல்சியஸ்
* கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 1 -2° செல்சியஸ் உயர்ந்துள்ளது. ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றம் ஏதுமில்லை.
* தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவையிலும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 - 4° செல்சியஸ் அதிகமாக பதிவாகியுள்ளது. ஏனைய தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது.
* தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 36-40° செல்சியஸ், வடதமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 33-39° செல்சியஸ், தென்தமிழக கடலோரப்பகுதிகளில் 35-36° செல்சியஸ், மலைப் பகுதிகளில் 22-31° செல்சியஸ் பதிவாகியுள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications