ஆந்திரா, தெலுங்கானாவில் வெளுக்கும் கனமழை- சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் எச்சரிக்கை-ரயில் சேவைகள் பாதிப்பு!
ஹைதராபாத்: ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கனமழை வெளுத்தெடுத்து வருகிறது. தெலுங்கானாவின் அனைத்து மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தெலுங்கானாவின் வாரங்கல் அருகே மழை வெள்ளத்தில் தண்டவாளம் அடித்துச் செல்லப்பட்டதால் ரயில் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கடந்த சில நாட்களாக இடைவிடாமல் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்து காட்டாற்று வெள்ளம் போல மழைநீர் பாய்ந்தோடுகிறது. தெலுங்கானாவின் அனைத்து மாவட்டங்களுக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம், கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஹைதராபாத்தில் அதீத கனமழை கொட்டும் என சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஹைதராபாத்தில் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஹைதராபாத், விஜயவாடாவில் பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் கட்டுப்பாட்டு அறைகளைத் திறக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளைக் கண்காணிக்க சிறப்பு குழுவினர் அமைக்கப்பட்டுள்ளனர்.
தெலுங்கானாவின் கேசமுத்ரம்- மகபூபாத் இடையே மழை வெள்ளத்தில் தண்டவாளம் அடித்துச் செல்லப்பட்டதால் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. விஜயவாடாவில் இருந்து வாரங்கல் செல்லும் அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்டுள்ளன. டெல்லி- விஜயவடா எக்ஸ்பிரஸ் ரயிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
ஆந்திராவின் விசாகப்பட்டினம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் விடிய விடிய கனமழை கொட்டியது. என்டிஆர் மாவட்டத்தின் விஜயவாடா நகரில் பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது. மொகல்ராஜபுரம் என்ற இடத்தில் மலையின் ஒரு பகுதி அப்படியே குடியிருப்புகள் மீது சரிந்து விழுந்தது. இந்த நிலச்சரிவால் இடிபாடுகளில் சிக்கி 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பெடகாக்கனி என்ற இடத்தில் மழையால் மாணவர்களை காரில் ஆசிரியர் ஒருவர் அழைத்துச் சென்றார். இந்த கார் ஓடையை கடக்க முயன்றபோது வெள்ளம் அப்படியே அடித்துச் சென்றது. இதில் ஆசிரியரும் 2 மாணவர்களும் உயிரிழந்தனர்.
-
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications