தென் தமிழ்நாட்டை புரட்டி எடுத்த பேய் மழை.. இன்று எந்தெந்த மாவட்டங்களில் எதற்கெல்லாம் விடுமுறை?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தென் தமிழ்நாட்டை பேய்மழை புரட்டி எடுக்கும் நிலையில் 4 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் தமிழ்நாட்டின் மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று முதலே கனமழை கொட்டித் தீர்த்தது. வரலாறு காணாத பெருமழையால் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்கள் பெரும் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.

Heavy rainfall batters Tamil Nadu: Schools closed in 8 districts state

இதனையடுத்து திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் முதலில் பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. பின்னர் இந்த 4 மாவட்டங்களில் அனைத்து அரசு நிறுவனங்கள், வங்கிகள், பொதுத்துறை நிறுவனங்களுக்கு பொது விடுமுறையாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் முதலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. தற்போது விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல சிவகங்கை மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி விடுமுறை அறிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+