வெயிலுக்கு பிரேக்.. இன்று இந்த 4 மாவட்டங்களில் கொளுத்தப் போகுது கனமழை.. சென்னையிலும் மழைக்கு சான்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று பல்வேறு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பாக நீலகிரி, கோவை, திண்டுக்கல் உள்பட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடைக்கால வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது. சென்னை போன்ற வடகிழக்கு மாவட்டங்களில் வெயில் தினமும் 100 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் அடித்து வருகிறது. எனினும் தமிழகத்தின் வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் ஒருசில இடங்களில் மழை பெய்து வருகிறது.

rain chennai summer

கோடை மழை

தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் என பல்வேறு இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. குறிப்பாக மாலை நேரங்களில் ஒருசில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் மழை கொளுத்தி எடுத்து வருகிறது. நேற்று தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் வெயில் தான் அடித்தது என்று சொல்லலாம்.

ஆனால் திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, தேனி, தென்காசி, வேலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், திருச்சி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மழை பெய்தது. இந்த நிலையில் இன்றும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், சென்னையிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் கூறியிருப்பதாவது:-

தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது.

4 மாவட்டங்களில் கனமழைக்கு சான்ஸ்

எனவே இன்று செவ்வாய்க்கிழமை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மே-7 முதல் 9 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மே 10 மற்றும் 11 ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பு

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+