Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கனமழை, வெள்ளம்.. விழுப்புரம், கடலூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. ஆட்சியர்கள் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை, வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி விழுப்புரம், கடலூரில் நாளை செவ்வாய்க்கிழமை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கனமழை, வெள்ளம் காரணமாகவும், மழைநீர் வடியாததன் காரணமாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

திருவண்ணாமலை, சேலம் மாவட்டத்திலும் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரண்டு தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

cuddalore rain school leave

ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. திருவண்ணாமலை, கடலூர், திண்டிவனம், கிருஷ்ணகிரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் பல இடங்களில் வெள்ளம் போல் மழை நீர் தேங்கியது.

விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அணைகள், குளங்களில் தண்ணீர் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் வயல், நகர், கிராமங்களுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. பலரது வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டது. தொடர்ந்து துணை ராணுவ படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தமிழக அரசும் பல்வேறு மீட்பு பணிகளை செய்து வருகிறது. தண்ணீரை வெளியேற்றும் பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் கடலூரில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கனமழை, வெள்ளம் காரணமாகவும், மழைநீர் வடியாததன் காரணமாகவும் மாணவர்களின் பாதுகாப்பு கருதி நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் விழுப்புரம் மாவட்டத்திலும் மாணவர்களின் பாதுகாப்பு கருதி நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்னும் பல்வேறு இடங்களில் வெள்ள நீர் வடியாததாலும், தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருவதாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவிட்டுள்ளார்.

இதேபோன்று திருவண்ணாமலை மாவட்டத்திலும் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அம்மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டார். இதேபோன்று சேலம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில்கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரண்டு தாலுகாக்களுக்கு நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் சரயு அறிவித்துள்ளார். அதாவது கிருஷ்ணகிரியில் ஊத்தங்கரை, போச்சாம்பள்ளி தாலுக்காக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிற மாவட்டங்களில் பள்ளிகள் முகாம்களாக செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் முடிவு எடுக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+