விடிய விடிய மழை வெளுத்து வாங்க போகுது.. நெல்லைக்கு தான் தொல்லையே! தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன தகவல்!
சென்னை: தென் தமிழக மாவட்டங்களான தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நாளை காலை வரை இடைவிடாத மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது எனவும், தேனி, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
தென்கிழக்கு அரபிக்கடலை சுற்றி வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. அதே நேரத்தில், இந்தியப் பெருங்கடல் மற்றும் குமரிக்கடல் பகுதியிலும் தனித்தனியாக ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது.
இதனுடன் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பது, தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு தொடர்ந்து மழை தரும் சூழலை ஏற்படுத்தியுள்ளது. இந்த வானிலை அமைப்புகளின் தாக்கத்தால் இன்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகம் மழை எச்சரிக்கை
குறிப்பாக தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக திடீர் கனமழை பெய்துவரும் நிலை தொடர்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை முதல் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்துக் கொண்டே வருகிறது. திருச்செந்தூர், உடன்குடி, குலசை, காயல்பட்டினம், ஆத்தூர், ஆறுமுகநேரி, நாசரேத் போன்ற கடலோர மற்றும் உள்பகுதிகளில் பல மணி நேரமாக இடைவிடாத மழை பெய்து வருகிறது. சாலைகள் பல இடங்களில் நீரில் மூழ்கியுள்ள நிலையில், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கும் நிலையும் உருவாகியதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வானிலை
நெல்லை மாவட்டத்திலும் பலத்த மழை தொடர்கிறது. நகரத்தைச் சுற்றிய புறநகர் பகுதிகள், சேரன்மகாதேவி, மணப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் வானம் முழுவதும் மேகமூட்டத்துடன் கனமழை பெய்து வருகிறது. சில இடங்களில் மின்னல், இடியுடன் கூடிய மழை பதிவாகியுள்ளது. இதற்கு இணையாக, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களிலும் மழை இடைவிடாமல் தொடர்கிறது. கன்னியாகுமரியின் உள் பகுதிகளில் ரகசியமாக வந்தெடுக்கும் கனமழை, சுற்றுலா மற்றும் தினசரி போக்குவரத்தில் சற்றே மந்தநிலையை உருவாக்கியுள்ளது.
கனமழை எச்சரிக்கை
தென்காசியின் மலையோர பகுதிகளில் பெய்யும் மழை காரணமாக சில இடங்களில் சிறிய நிலச்சரிவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால், வனத்துறையினர் மற்றும் மீட்புப்பணியாளர்கள் எச்சரிக்கை நிலையில் உள்ளனர். மொத்தத்தில், தென்தமிழகத்தின் நான்கு மாவட்டங்களையும் சூழ்ந்திருக்கும் இந்த வானிலை அடுத்த சில நாட்களும் தொடரும் என வானிலை ஆய்வு மையம் கூறுகிறது. மேலும், கடலுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு வெதர்மேன்
இந்நிலையில் தென் தமிழகத்தின் பல மாவட்டகளில் இன்று இடைவிடாத மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்," தென் தமிழக மாவட்டங்களான தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நாளை காலை வரை இடைவிடாத மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாஞ்சோலை பெல்ட் (ஊத்து, நாலுமூக்கு) மீது பெரிய எண்கள் இருப்பதால் அனைவரது பார்வையும் அங்கே உள்ளது. மாஞ்சோலையில் இருந்து முதல் முச்சதத்தையோ ( 300) அல்லது அரிய நாற்சதத்தையோ (400) பார்ப்போமா? நாளைக்கு தான் தெரியும். தென் தமிழக மாவட்டங்களான தேனி, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது." என கூறியுள்ளார்.
-
இன்னைக்கும் மழை விடாது.. 14 மாவட்டங்களில் வெளுக்க போகுது! சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை மையம் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications