வெளுக்கும் கனமழை.. பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிப்பு! லிஸ்டில் உங்க மாவட்டம் இருக்கானு பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: கனமழை காரணமாக நாளை செங்கல்பட்டு மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.

குமரிக்கடல், தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு - மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், கடந்த சில நாட்களாக தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக மேட்டூர் தவிர மற்ற அணைகள் எல்லாம் நிரம்பியுள்ளன. ஆனால் வடகிழக்கு பருவமழை தற்போது வரை 10 சதவிகிதம் குறைவாகதான் பெய்திருக்கிறது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Holiday announcement for schools in Chengalpattu district due to heavy rain

இந்நிலையில் இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "அந்தமான் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலில் வரும் 27ம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும். இது வலுப்பெற்று 29ம் தேதி காற்றழுத்த மண்டலமாக மாற வாய்ப்பிருக்கிறது. இதன் காரணமாக தமிழகம் புதுச்சேரியில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும். இன்று திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும். நாளை 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது" என ஆய்வு மையம் கூறியிருந்தது.

இந்நிலையில், கனமழை காரணமாக நாளை செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. சிறப்பு வகுப்புகள் எதுவும் நடத்தக்கூடாது என்றும் முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். அதேபோல காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என மாவட்ட கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+