நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை.. தொடர் கனமழை காரணமாக கலெக்டர்கள் அறிவிப்பு!
நீலகிரி: கனமழை கொட்டித் தீர்த்து வருவதால் நீலகிரி மாவட்டத்தில் 4 வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கோவை மாவட்டம் வால்பாறை தாலுகாவில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்திற்கு நேற்று ரெட் அலர்ட் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், காலை முதலே மழை தொடர்ந்து வந்தது. பல்வேறு பகுதிகளிலும் நிலச்சரிவுகள் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

அதிக அளவில் மழை பொழிந்து வருவதால் நஞ்சநாடு அருகே உள்ள கப்பத்தொரை பகுதியில் விவசாய நிலங்களுக்குள் நீர் புகுந்துள்ளது. மேலும் இத்தலார் கிராமத்தில் வீட்டின் முன் பகுதியில் உள்ள சுவர் இடிந்து விழுந்தது. கூடலூர் பகுதிகளில் அதிக மழையின் காரணமாக வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அவலாஞ்சியில் 20.4 செ.மீ மழை பெய்துள்ளது. எமரால்டில் 12.3 செ.மீ, அப்பர் பவானியில் 10.6 செ.மீ, சேரன்கோட்டில் 8.3 செ.மீ, பந்தலூர் 8.4 செ.மீட்டர், கூடலூரில் 7 செ.மீ, தேவாலாவில் 93 6.8 செ.மீ, நடுவட்டத்தில் 6.3 செ.மீ, ஒவேலியில் 6.2 செ.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கனமழை நீடித்து வரும் நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, கூடலூர், குந்தா, பந்தலூர் ஆகிய 4 தாலுக்காக்களுக்கு பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 4 வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக, கோவை மாவட்டத்திற்கு கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் மாவட்டத்திற்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கும் வகையில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் கோவை மாவட்டம் வால்பாறை தாலுகாவிற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து கோவை மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications