தமிழ்நாட்டில் திருவள்ளூர் முதல் திருநெல்வேலி வரை எத்தனை மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
சென்னை: சில இடங்களில் மிக கனமழையும், சில பகுதிகளில் கனமழையும் பெய்யும் என்ற எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், கடலூர் , அரியலூர், திண்டுக்கல், ராமநாதபுரம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் மேற்கு, அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டு இருக்கிறது என்றும் இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இலங்கை-தமிழக கடலோரப் பகுதிகளை அடையும் என்றும் இதன் காரணமாக காவிரி டெல்டா மற்றும் வடமாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

குறிப்பாக அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கோவை, திருப்பூர், கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது
வானிலை மையத்தின் எச்சரிக்கைக்கு மத்தியல் வடகடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, மயிலாடுதுறை, கடலூர், திருவாரூர், தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களில் நேற்று இரவு முதல் தற்போது வரை விடிய விடிய பரவலாக விட்டு விட்டு கனமழை முதல் மிககனமழை பெய்து வருகிறது. நாகை மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதலே மழை விட்டு, விட்டு பெய்து வருகிறது. நேற்று மதியம் சுமார் ஒரு மணி நேரம் கனமழை வெளுத்து வாங்கியது.
தஞ்சை மாவட்டத்திலும் நேற்று காலை முதல் மழை பெய்தது. காலை 7 மணிக்கு லேசான தூறலுடன் மழை பெய்ய தொடங்கிது. அதன் பின்னர் அவ்வப்போது விட்டு, விட்டு பலத்த மழை பெய்தது. தொடர்ந்து அவ்வப்போது மழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்திலும் நேற்று முன்தினம் இரவு முதல் கனமழையும் தொடர்ந்து காலை முதல் மிதமான மழையும் பெய்து வருகிறது. இதேபோல கடலூரிலும் நேற்று இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களிலும் நேற்று காலை முதலே விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் சில இடங்களில் மிக கனமழையும், சில பகுதிகளில் கனமழையும் பெய்யும் என்ற எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், கடலூர் , அரியலூர், திண்டுக்கல்,செங்கல்பட்டு, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கரூர், ராணிப்பேட்டை, வேலூர், தூத்துக்குடி, திருப்பத்தூர், சேலம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கும் மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று ஐந்து வகுப்பு வரை மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டள்ளது. புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களிலும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
சென்னை
காஞ்சிபுரம்
செங்கல்பட்டு
திருவள்ளூர்
திருவாரூர்
ராமநாதபுரம்
திண்டுக்கல்
விழுப்புரம்
புதுக்கோட்டை
மயிலாடுதுறை
தஞ்சாவூர்
கடலூர்
அரியலூர்
ராணிப்பேட்டை
கரூர்
வேலூர்
தூத்துக்குடி
திருப்பத்தூர்
சேலம்
திருநெல்வேலி (5ம் வகுப்பு வரை)
பள்ளி கல்லூரிகள் விடுமுறை
புதுச்சேரி
காரைக்கால்
திருவண்ணாமலை
விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்ககப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் அறிவித்துள்ளார்.
இன்று நடைபெற இருந்த திருவள்ளூர் பல்கலை தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications