இன்று காலை 10 மணிக்குள் 35 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
சென்னை: தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணிக்குள் 35 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் அதிதீவிரமாகி உள்ளது. தமிழ்நாடு, கேரளா மாநிலங்களில் கடந்த சில நாட்களாக மிக அதிகமான கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

கனமழை காரணமாக தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மேட்டுப்பாளையம் தாலுகாவில் உள்ள 193 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை காரமடை ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. கோபிசெட்டிபாளையத்தில் கொட்டித் தீர்த்த மழையால் குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. கொடிவேரி அணைக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் பெருமழை காரணமாக ஆறுகள், ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனிடையே 6 மாவட்டங்களில் மிக அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. நீலகிரி,
கோவை, திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
தற்போது தமிழ்நாட்டின் 35 மாவட்டங்களுக்கு காலை 10 மணிக்குள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை
திருவள்ளூர்
செங்கல்பட்டு
காஞ்சிபுரம்
புதுக்கோட்டை
தஞ்சாவூர்
திருச்சி
மதுரை
ராமநாதபுரம்
விருதுநகர்
தென்காசி
திருநெல்வேலி
தூத்துக்குடி
கன்னியாகுமரி உள்ளிட்ட 35 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கோழிப்போர்விளையில் மிக அதிகபட்சமாக 13 செ.மீ மழை கொட்டித் தீர்த்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பல இடங்களில் 10 செ.மீக்கும் அதிகமான மழை பதிவாகி இருக்கிறது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications