ஊட்டி போல மாறிய சென்னை.. விட்டு விட்டு காற்றுடன் லேசான மழை.. காலையிலேயே குளிர்ச்சியான கிளைமேட்
சென்னை: சென்னையில் நேற்று இரவு முழுக்க பலத்த காற்றுடன் சீரான இடைவெளியில் மழை பெய்தது. இன்றும் காலையில் மேகமூட்டத்துடன் இடையிடையே லேசான மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. ஊட்டியை போல கிளைமேட் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் சென்னை வாசிகள் பதிவிட்டு வருகிறார்கள்.
தென்மேற்கு வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னையில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. நேற்று இரவு முழுக்க பலத்த காற்றுடன் சீரான இடைவெளியில் மழை பெய்து வந்தது. இன்று காலையில் இருந்தும் மேகமூட்டத்துடன் இடையியிடையே லேசான மழையும் பெய்து வருகிறது.

சென்னை எழும்பூர், கிண்டி, அமைந்த கரை, கோயம்பேடு, குரோம்பேட்டை, கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இரவு முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. மேகமூட்டத்துடன் ஜில்லென சென்னை மாறியதால் ஊட்டியை போல கிளைமேட் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் சென்னை வாசிகள் பதிவிட்டு வருகிறார்கள்.
சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களிலும் நேற்று தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்தது. தஞ்சை, திருவாரூர், திண்டுக்கல், மயிலாடுதுறை, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக இன்று காலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது.
இதேபோன்று தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. காலை 7 மணியளவில் தஞ்சை, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களிலும் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்தது.
தென்மேற்கு வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னையில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. நேற்று இரவு முழுக்க பலத்த காற்றுடன் சீரான இடைவெளியில் மழை பெய்து வந்தது. இன்று காலையில் இருந்தும் மேகமூட்டத்துடன் இடையிடையே லேசான மழையும் பெய்து வருகிறது.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் ஒரு சில பகுதிகளில் அவ்வப்போது இடி, மின்னலுடன் கூடிய மிதமானது முதல் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்ப நிலை 27-28 டிகிரி செல்சியசை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்ப நிலை 24-25 டிகிரி செல்சியை ஒட்டியும் இருக்க கூடும் என்று தெரிவித்துள்ளது.
-
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள்












Click it and Unblock the Notifications