கன்னியாகுமரி காட்டாற்று வெள்ளம்.. மாணவர்களை காப்பாற்றிய பழங்குடி மக்கள்.. பள்ளிகளுக்கு விடுமுறை
கன்னியாகுமரி: கடந்த சில நாட்களாகவே கன்னியாகுமரியில் மழை வெளுத்து வாங்கி வரும்நிலையில், இன்றைய தினமும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து மாவட்டத்தில் இன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது.. ஒரு சில மாவட்டங்களில் கனமழையும் ஒருசில இடங்களில் லேசான மழையும் பெய்து வருகிறது. நேற்றைய தினமும் நல்ல மழை தமிழகத்தில் பெய்தது.

கனமழை: இந்நிலையில், மத்திய கிழக்கு வங்கக்கடலில் உருவான, 'டானா' புயல், படிப்படியாக வலுவடைந்து, தீவிர புயலாக மாறியுள்ளது. இது, வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, ஒடிசா -மேற்கு வங்காளம் இடையே, புரி - சாகர் தீவுகளுக்கு இடையில், இன்று காலை அதி தீவிர புயலாக கரையை கடந்திருக்கிறது.
குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவிய, வளி மண்டல சுழற்சியானது அரபிக்கடல் நோக்கி நகர்ந்துள்ளது.. எனவே, தென்கிழக்கு அரபிக்கடல், அதை ஒட்டிய லட்சத்தீவு கடல் பகுதியில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவியதன் காரணமாக, தமிழகத்தில் குமரி உட்பட தமிழகத்தில் கனமழைக்கு இன்று வாய்ப்புள்ளதாக கூறி, 17 மாவட்டங்களுக்கும் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் கன்னியாகுமரி மாவட்டத்துக்கும் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
விடுமுறை: தொடர் கனமழை காரணமாகக் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று அதாவது 25ம் தேதி ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அழகு மீனா உத்தரவிட்டுள்ளார். கன்னியாகுமரியில் நாளையும் கனமழை எச்சரிக்கை விடப்பட்டு இருப்பதால் முன்னெச்சரிக்கையாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாகவே கன்னியாகுமரியில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இம்மாவட்டத்தில் பேச்சிப்பாறை, கோதையார், மோதிரமலை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து கொண்டிருக்கிறது..
பழங்குடி மக்கள்: இதனால், மலைப்பகுதியில் பழங்குடி மக்கள் வசிக்கும் கொலோஞ்சிமடம் பகுதியில் திடீரென காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓட துவங்கிவிட்டது.. இதனால், பள்ளி சென்று திரும்பிய மாணவ, மாணவியர் வீடு திரும்ப முடியாமல் மறுகரையில் சிக்கித்தவித்தனர்.. இதைப்பார்த்து பதறிய அந்த பகுதியை சேர்ந்த பழங்குடி மக்கள், மாணவர்களை மீட்டு பத்திரமாக கரைக்கு அழைத்து வந்தார்கள்.. இப்போதுகூட பேச்சிப்பாறை, கோதையார், மோதிரமலை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications