மிக்ஜாம் மழை: சென்னை முகலிவாக்கம், மணப்பாக்கத்தில் களமிறங்கிய 'ராணுவம்'- தத்தளித்தவர்களை மீட்டது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மிக்ஜாம் புயல் கொட்டி தீர்க்கும் வரலாறு காணாத பெருமழையில் சென்னை முகலிவாக்கம், மணப்பாக்கம் பகுதியில் சிக்கி தவித்த பொதுமக்களை ராணுவ வீரர்கள் மீட்டனர்.

வங்க கடலில் நகர்ந்து வரும் மிக்ஜாம் புயல் சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பெருமழை கொட்டித் தீர்த்தது. சில மணிநேரங்களிலேயே 20 முதல் 30 செ.மீ. மழை வரை கொட்டியது. இதனால் ஏரிகள் பலவும் நிரம்பி குடியிருப்புகளை நோக்கி உபரி நீர் பெரும் வெள்ளமாக பாய்ந்தோடுகிறது. சென்னை புறநகரின் பெரும்பாலான பகுதிகளில் ஆறுகளைப் போல சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இந்த வெள்ளத்தில் வாகனங்கள் அதிவேகமாக அடித்துச் செல்லப்படுகின்றன.

 Madras Unit of Indian Army rescues people from Mugalivakkam and Manapakkam areas in Chennai that are affected by heavy rainfall and massive waterlogging.

இதனையடுத்து மழை வெள்ளம் மீட்பு நிவாரணப் பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படை களமிறங்கி இருக்கிறது. சில இடங்களில் ராணுவத்தினரும் களமிறங்கி மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை மணப்பாக்கம், முகலிவாக்கம் பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அப்பகுதிகளில் தத்தளித்த பொதுமக்களை ராணுவத்தினர் படகுகளில் சென்று மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+