கையில் வாக்கி டாக்கி.. இரவு முழுக்க தூங்காமல்.. சென்னையை சல்லடை போட்ட மேயர் ப்ரியா.. அசத்துறாங்களே
சென்னை: வடகிழக்கு பருவமழை சென்னையை புரட்டி எடுத்து வரும் நிலையில் நேற்று சென்னையில் இரவு முழுக்க மேயர் ப்ரியா ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.
வடகிழக்கு பருவமழை 21.10.2023 அன்று தொடங்கியதிலிருந்து, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில், 01.10.2023 முதல் 13.11.2023 வரை 221.7 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பான மழையளவைக் காட்டிலும் 17 விழுக்காடு குறைவு ஆகும். வடகிழக்கு பருவமழைக் காலத்தில் 13.11.2023 முடிய, 8 மாவட்டங்களில் அதிக மழைப்பொழிவும், 7 மாவட்டங்களில் இயல்பான மழைப்பொழிவும், ஏற்பட்டுள்ளது.

23 மாவட்டங்களில் குறைவான மழைப்பொழிவும், இன்று (14.11.2023) காலை 8.30 மணி வரை 35 மாவட்டங்களில் 13.25 மி.மீ. மழை பெய்துள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 11.3 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. 5 இடங்களில் மிக கனமழையும், 30 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது.
சென்னையில் மழை: ஆனால் நேற்று காலையில் இருந்து சென்னையில் விடாமல் கனமழை பெய்து வருகிறது. புயல் சின்னம் காரணமாக சென்னையில் மழை அடித்து துவைத்துக்கொண்டு இருக்கிறது.
புயல் சின்னம்: கடந்த 27-11-2023ம் தேதி காலை 08.30 மணி அளவில் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து 28-11-2023 காலை 08.30 மணி அளவில் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவுகிறது. இதுதான் நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலிமை அடைந்தது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 30-ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும். இது அதற்கடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெற கூடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதனால் சென்னையில் மழை தீவிரமாக பெய்து வருகிறது. நேற்று 20 இடங்களுக்கும் மேற்பட்ட பகுதிகளில் 100 செமீக்கும் அதிகமாக மழை பெய்தது. நேற்று சென்னையில் இரவு முழுக்க மேயர் ப்ரியா ஆய்வு பணிகளை மேற்கொண்டார். சென்னையில் நேற்று மழையால் பாதிக்கப்பட்ட இடங்கள், அடையாறு ஆறு, ஏரிகள் அனைத்தையும் மேயர் ப்ரியா பார்வையிட்டார்.
அதோடு இல்லாமல் நேரடியாக சுரங்க பாதைகளுக்கு சென்று அங்கும் தண்ணீர் தேங்கி இருக்கிறதா என்று பார்வையிட்டார். மேயர் ப்ரியா இப்படி இரவோடு இரவாக மழையில் ரெயின் கோட்டோடு, கையில் வாக்கி டாக்கியோடு பார்வையிட்டது அதிகாரிகளை மிரள வைத்தது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆலோசனைபடி, தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டு மழைநீர் தேங்கிய பகுதியில் ஆய்வு மேற்க்கொண்டோம். தொடர்ந்து மழைநீர் தேங்கிய பகுதியில் மழைநீரினை துரிதமாக வெளியேற்ற.. pic.twitter.com/7q2HzXx7uZ
— Priya (@PriyarajanDMK) November 30, 2023
சென்னை மழைக்கு இடையே மாநகராட்சி துரித நடவடிக்கையால் எங்கும் தண்ணீர் தேங்கவில்லை. சென்னையில் உள்ள 22 போக்குவரத்து சுரங்கப்பாதைகளிலும் 21 சுரங்க பாதைகளில் மழைநீர் தேங்கவில்லை என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.
துரிதமான நடவடிக்கை; மழையினால் சரிந்த 12 மரங்களும் துரிதமாக அகற்றப்பட்டு உள்ளது என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது. சிசிடிவி கேமராக்கள் மூலம் சுரங்கப்பாதைகளில் தொடர் கண்காணிக்கப்பட்டு வருகிறது. லேசாக மழைநீர் தேங்கிய 41 இடங்களில், 31 இடங்களில் மழைநீர் முழுமையாக வடிந்தது- சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
இரவு மழை; நேற்று இரவு பெய்த மழை காரணமாக சென்னையில் தேங்கிய தண்ணீர் உடனே வடிந்து உள்ளது. சென்னையில், அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , ராயப்பேட்டை, கிண்டி, வடபழனி ,திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை, மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆகிய பகுதிகளில் இரவு முழுக்க மழை பெய்தது. அதிகாலை 2- 3 மணி நேரம் இங்கு விடாமல் மழை பெய்தது. ஆனாலும் அங்கு தண்ணீர் வேகமாக வடிந்துள்ளது.












Click it and Unblock the Notifications