நாளையும் தமிழ்நாட்டில் வெப்ப அலை.. 28ஆம் தேதி வரை வெயில் கொடுமை குறையாது.. வானிலை மையம் அலர்ட்!
சென்னை: தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் அலெர்ட் செய்துள்ளது.
கோடைக்காலம் தீவிரம் அடைந்துவிட்ட நிலையில், கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அக்னி நட்சத்திர காலத்திற்கு முன்பாகவே தமிழ்நாட்டில் வெப்ப அலை கடுமையாக வீசத் தொடங்கியுள்ளது. பகல் நேரத்தில் மக்கள் வெளியே சென்றால் முகம், உடல் எரியும் அளவுக்கு வெப்பம் தகித்து வருகிறது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலை வீசும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால் வெப்ப அலை வீசுவதற்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் கர்நாடகா, தெலுங்கானா, உத்தர பிரதேசம், கடலோர ஆந்திரா, மேற்கு வங்கம், சிக்கிம், ஜார்க்கண்ட், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் இன்று முதல் வரும் 28 ஆம் தேதி வரை வெப்ப அலை வீச கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழக உள் மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் இயல்பை விட 2 டிகிரி செல்கியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை அதிகமாக இருக்கக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 38 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை இருக்கக்கூடும். இன்று வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 15 மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் இன்று முதல் 28ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு 108 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாகும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் தென் தமிழ்நாடு, வட தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் பகல் நேரத்தில் பொதுமக்கள் யாரும் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்றும், தண்ணீர் மற்றும் பழச்சாறை அதிகளவு பருக வேண்டும் என்று சேலம், கிருஷ்ணகிரி, கோவை, கரூர் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்கள், பொதுமக்களை அறிவுறுத்தி உள்ளனர்.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications